பாரதி ராஜா மகன் மனோஜ் இயக்கிய முதல் படம்.! “மார்கழி திங்கள்” டீசர் இதோ.!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கியிருக்கும் மார்கழி திங்கள் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் திரையுலகில் மண்வாசனை திரைப்படங்களை எடுத்து தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் தனது மகனை தாஜ்மஹால் என்ற படத்தின் மூலமாக நடிகராக களம் இறக்கினார். தொடர்ந்து வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம், அன்னக்கொடி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார் மனோஜ். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாரதி ராஜா மகன் மனோஜ் இயக்கிய முதல் படம்.! "மார்கழி திங்கள்" டீசர் இதோ.! 1
இந்த நிலையில் மனோஜ் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் “மார்கழி திங்கள்” என்கிற படத்தை இயக்குவதன் மூலமாக தமிழ் திரையுலகுக்கு இயக்குனராக அறிமுகம் ஆகிறார் மனோஜ் பாரதிராஜா. இந்த படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, புது முகங்கள் பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். கிராமத்தில் இருக்கும் பள்ளி பருவ காதல் கதையை சொல்லும் படமாக இது இருக்கும் என்று டீசரை பார்க்கும் பொழுது தெரிகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  4 மாசமா பொண்ண தேடாம என்ன பண்ணிட்டு இருந்தீங்க? சரமாரியாக கேட்ட நெட்டிசன்கள்... பதிலடி கொடுத்த ராஜ் கிரண்

பாரதி ராஜா மகன் மனோஜ் இயக்கிய முதல் படம்.! "மார்கழி திங்கள்" டீசர் இதோ.! 3
31 வருடங்களுக்குப் பிறகு இளையராஜா பாரதிராஜாவின் மகனுக்காக இசையமைத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன்பே வெளியானது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டிருந்தார். படப்பிடிப்புகள் முடிந்து படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் தற்போது படத்தின் டீசரை படக் குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர்.நீங்களும் அந்த டீசரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment