எல்லா தமிழ் படங்களையும் மிக்ஸ் பண்ணி ஒரு படத்தை எடுத்து வச்சிருக்கானுங்க.! ஜவான் பற்றி மக்கள் கருத்து.!

இந்தியா முழுவதும் இன்று ஜவான் திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் தற்போது படம் எப்படி இருந்தது என்பது குறித்து தமிழ் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பலரும் பல விஜய், அஜித் திரைப்படங்களை கலந்து ஒரு படத்தை எடுத்திருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலரோ படம் நன்றாக இருப்பதாகவும் விஜய் சேதுபதி மற்றும் ஷாருக்கான் இருவரின் நடிப்பு மிக அருமையாக இருந்ததாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எல்லா தமிழ் படங்களையும் மிக்ஸ் பண்ணி ஒரு படத்தை எடுத்து வச்சிருக்கானுங்க.! ஜவான் பற்றி மக்கள் கருத்து.! 1

விளம்பரம்

 

தமிழ் திரஉலகில் நான்கு படங்களை இயக்கியிருந்த போதிலும் நான்குமே வெற்றி படங்களாக கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. இவர் முதல் முறையாக ஹிந்தி திரையுலகில் காலடி எடுத்து வைத்திருந்தார். ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் தீபிகா படுகோன், யோகி பாபு, நயன்தாரா உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இது ஹிந்தி படமாக இருந்தபோதிலும் இதில் பணியாற்றிய பலர் தமிழர்கள் என்பதால் இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  "என்னை உண்மையாகவே கடத்தினார்கள்"!! "பிதாமகன் சீன் போல நமிதாவின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!!

எல்லா தமிழ் படங்களையும் மிக்ஸ் பண்ணி ஒரு படத்தை எடுத்து வச்சிருக்கானுங்க.! ஜவான் பற்றி மக்கள் கருத்து.! 3

தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால் படம் 9 மணிக்கு தான் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இதனால் தற்போது படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்கள் பலரும் ஜவான் திரைப்படம் குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஹிந்தி ரசிகர்களுக்கு இந்த படம் புது அனுபவமாக இருக்கலாம், ஆனால் தமிழ் ரசிகர்கள் பார்த்து சலித்த கதையை தான் திருப்பி எடுத்து வைத்திருப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Bingoo Box

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment