நடிகர் ஜெயம் ரவியின் 43வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் நடித்து வரும் ‘சைரன்’ படத்திலிருந்து குட்டி டீசர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஜெயம் என்கிற படத்தின் மூலமாக அறிமுகமாகி பல நல்ல படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் முன்னணி நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் தற்போது அந்தோணி பாக்யராஜ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கத்தில் சைரன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இவர் அஜித் நடிப்பில் வெளியான ‘விசுவாசம்’, பி.எஸ் மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி, ‘சைரன்’ படத்தின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்து வருகிறார். இவர் ஜெயம் ரவியின் மாமியார் ஆவார். ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த அடங்கமறு பூமி போன்ற படங்களை தயாரித்திருக்கிறார் சுஜாதா. தற்போது மூன்றாவது முறையாக தனது மருமகன் ஜெயம் ரவியை வைத்து சைரன் படத்தை தயாரித்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜெயம் ரவியுடன் இணைந்து யோகி பாபு, சமுத்திரகனி போன்றோரும் முக்கிந கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை செல்வகுமார் மேற்கொண்டுள்ளார். இன்று ஜெயம் ரவியின் 43 வது பிறந்தநாள் என்பதால் இந்த படத்தில் இருந்து டீசர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றனர் படக்குழுவினர். சிறைக் கைதியாக இருக்கும் ஜெயம் ரவி சிறையிலேயே ஒர்க்அவுட் செய்வது போலவும், பின்பு டான் போன்ற லுக்கில் வலம் வருவது போலவும் இறுதியில் கையில் ஒரு பட்டாகத்தையும் மற்றொரு கையில் விலங்குடனும், பிகில் ராயப்பன் மற்றும் கைதி இரண்டு கலந்த கலவையான ஒரு லுக்கில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருப்பது போன்ற வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sony Music South