நயன்தாரா போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.! கொச்சையாக பதிவிட்ட அசல் கோலார்.! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!

நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பதிவில் பிரபல பாடகர் அசல் கோலார் பதிவிட்டுள்ள கமெண்ட் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதை கேலி செய்யும் விதமாக அசல் கோலார் தற்போது கமெண்ட் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார் அந்த கமெண்ட் தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஆண்டு தனது காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு, வாடகை தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது நயன்தாரா சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கை தொடங்கியிருந்தார்.

நயன்தாரா போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.! கொச்சையாக பதிவிட்ட அசல் கோலார்.! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.! 1

விளம்பரம்

புதிய கணக்கை தொடங்கிய உடனேயே தனது இரட்டை மகன்களானன உயிர் ருத்ரோனில் மற்றும் உலக் தெய்விக் ஆகிய இருவரையும் எடுத்துக்கொண்டு வருவது போன்ற ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். ஓணம் கொண்டாட்டங்கள், கிருஷ்ண ஜெயந்தி, ஜவான் வெற்றி போன்ற பலவற்றை பகிர்ந்து வருகிறார் நயன்தாரா. இந்நிலையில் குழந்தைகளுடன் இருக்கும்வீடியோவிற்கு கீழே அசல் கோலார் இரட்டை அர்த்தம் வருவது போல, “விரைவில் இந்த குழந்தைகள் அவரின் உண்மையான தாய் யார் என்பதை அறிந்து கொள்ள நான் விருப்பப்படுகிறேன்” என்று பகிர்ந்திருந்தார்.

தொடர்புடையவை  தனுஷின் வெறித்தனமான நடிப்பில் வெளியானது "வாத்தி" படத்தின் ட்ரைலர்.! இதோ வீடியோ.!

நயன்தாரா போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.! கொச்சையாக பதிவிட்ட அசல் கோலார்.! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.! 3

விளம்பரம்

அந்த கமெண்ட்டைப் பார்த்த பலரும் அசல் கோலாரை பயங்கரமாக திட்டி வருகின்றனர். ஜோர்த்தாலே என்கிற பாட்டின் மூலமாக அறிமுகமான அசல் கோலார் பிக் பாஸ் சீசன் 6ல் பெண்களிடம் உரசி உரசி பேசி பலரிடமும் திட்டு வாங்கிக் கொண்டவர். பின்னர் லியோ படத்தில் நான் ரெடி தான் வரவா என்கிற பாடலை பாடியும் இருக்கிறார். தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் அசல் கோலார் தற்போது இதுபோல ஒரு கமெண்டை போட்டதால் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். இருந்த போதிலும் அந்த கமெண்ட் நீக்கப்படாமல் அப்படியே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.!

விளம்பரம்

Leave a Comment