நடிகர் விவேக் இந்துவா? கிறிஸ்தவரா? என்கிற சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அவரது தாயாரின் நினைவிடத்தில் இருக்கும் சிலுவை இதான் காரணம். 1990களில் தொடங்கி தனது திரைப் பயணத்தை தொடங்கியவர் நடிகர் விவேக். பல ஆண்டுகளாக நகைச்சுவை திறமையால் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்தார். தனது காமெடிகளில் முற்போக்கு சிந்தனைகளையும் பகுத்தறிவு சிந்தனைகளையும் அவ்வப்போது கூறிவந்த நடிகர் விவேக் தனது வாழ்க்கையிலும் முற்போக்கு வாதியாகவே திகழ்ந்தார். அப்துல் கலாமின் வார்த்தைகளுக்கு இணங்க மரக்கன்றுகளை நடுவதை தனது முழு நேர தொழிலாக வைத்திருந்தார். ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவது தான் இவரது கனவாக இருந்தது. ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மறைந்து விட்டார் விவேக். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தி வந்த இரவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகி இருந்தார். இது திரையுலகினர் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கடைசியாக சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடித்திருந்த ‘தி லெஜண்ட்’ படத்தில் நடித்திருந்தார். இதுவே இவரது கடைசிப் படமாகும். இந்த நிலையில் விவேக் மறைந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் தற்போது விவேக் இந்துவா? கிறிஸ்தவரா? என்கிற சர்ச்சை இணையத்தில் எழுந்திருக்கிறது. அதற்கு காரணம் விவேக் என்று சொந்த ஊரில் இருக்கும் அவரது தாயார் மற்றும் கொள்ளு தாத்தா நினைவிடத்தில் சிலுவை நடப்பட்டு இருப்பது தான்.

இது குறித்து பேசிய விவேக்கின் உறவினர், விவேக்கின் கொள்ளுத் தாத்தா மற்றும் அப்பாவின் அப்பா கிறிஸ்தவர்கள். ஆனால் விவேக்கின் அப்பா இந்து மதத்தை தான் கடைபிடித்து வந்தார். அதேபோல விவேக்கும் இந்து மதத்தை கடைபிடித்து இருக்கிறார். இவர்கள் பலரும் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவராக இருப்பினும், கிறிஸ்துவ மதத்தை தழுவியவர்கள் ஆவார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் மூத்த தலைமுறை கிறிஸ்தவ மதத்தையும் அடுத்த தலைமுறை இந்து மதத்தையும் பின்பற்றி இருக்கிறார்கள். ஆனால் விவேக் மற்றும் அவரது தந்தை இருவருமே இந்து மதத்தவர் தான் என்று விவேக்கின் உறவினர் ஒருவர் விளக்கம் அளித்திருக்கிறார்.! அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Breaking Vlogs