இறந்து போன நடிகை சௌந்தர்யாவை அப்படியே உரித்து வைத்து இருக்கும் பெண் ஒருவரின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கோலார் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் நடிகை சௌந்தர்யா. இவரது தந்தை பிரபல திரைப்பட எழுத்தாளரும், தயாரிப்பாளரும் ஆவார். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக மருத்துவம் படிப்பதை நிறுத்திவிட்டு திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார் சௌந்தர்யா.
View this post on Instagram
முதல் முறையாக 1993ம் ஆண்டு வெளியான ‘பொண்ணு மணி’ என்ற தமிழ் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். தமிழ் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் செளந்தர்யா நடித்துள்ளார். ரஜினிகாந்த்துடன் அருணாச்சலம், படையப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.
View this post on Instagram
2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள ஹெலிகாப்டரில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் அகால மரணமடைந்தார். மேலும் அப்போது அவர் கர்ப்பவதியாக இறந்தார்.இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
View this post on Instagram
2003 ஆம் ஆண்டில், ஜி.எஸ். ரகுவை மணந்தார், அவரது தாய்வழி உறவினர், தொழில் ரீதியாக மென்பொருள் பொறியாளர் ஆவார். சௌந்தர்யாவின் இறப்பு அவரது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரிய முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரின் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
View this post on Instagram
இந்த நிலையில் அப்படியே சௌந்தர்யாவை உரித்து வைத்து இருப்பது போல ஒரு பெண் இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிட்டு வருகிறார். சித்ரா என்னும் பெயர் கொண்ட அவர் பார்ப்பதற்கு அப்படியே மறைந்த சௌந்தர்யா போலவே இருக்கிறார்.
View this post on Instagram
அவரின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரின் வீடியோக்களை பார்த்த பலரும் சௌந்தர்யா மறுபிறவி எடுத்து வந்தது போலவே உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram