அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் இணைத்து நடித்துள்ள முதல் படம்.! ‘Blue Star’ First Single இதோ

அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவருக்கும் இன்று திருமணம் நடந்து முடிந்து இருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படமான ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணமே செய்து கொண்ட நிலையில் மிக தாமதமாக ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்டுள்ளது படக்குழு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இணைத்து நடித்துள்ள முதல் படம்.! 'Blue Star' First Single இதோ 1

விளம்பரம்

பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகளாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருநெல்வேலியில் இட்டேரி என்ற இடத்தில் இவர்களது திருமணம் நடந்து முடிந்துள்ளது. ‘ப்ளூ ஸ்டார்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. பா. ரஞ்சித்திடம் உதவியாளராக இருந்த தினகரன் சிவலிங்கம் இயக்கும் இந்த படத்தை பா.ரஞ்சித்தின் ‘நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கிறது.

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இணைத்து நடித்துள்ள முதல் படம்.! 'Blue Star' First Single இதோ 3
இந்த நிலையில் படத்தின் எந்த அப்டேட்டுகளும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வீடியோவைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இன்று திருமணத்தை முடித்த புது மணத் தம்பதிகளுக்காக அவர்கள் சர்பிரைஸ் செய்துள்ளனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்
தொடர்புடையவை  மகள் திருமணத்தை சத்தம்மில்லாமல் நடத்தி முடித்த கருணாஸ்.! இதோ வீடியோ மற்றும் புகைப்படங்கள்.!

Youtube Video Embed Code Credits: Think Music India

விளம்பரம்

Leave a Comment