நிலா பாப்பா உன் அப்பா நான் தான் டா.! உண்மைகளை தெரிந்துகொன்டு கதறி அழும் கணேஷ்.!

பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் அமிர்தாவின் முன்னாள் கணவர் மொபைலில் உள்ள அமிர்தாவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய குழந்தை தான் நிலா என்பதை தெரிந்து கொள்கிறார். தனக்கு மகள் இருக்கும் விஷயத்தை தெரிந்து கொண்ட அவர் கீழே விழுந்து கதறி அழுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிலா பாப்பா உன் அப்பா நான் தான் டா.! உண்மைகளை தெரிந்துகொன்டு கதறி அழும் கணேஷ்.! 1
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் பலரின் ஃபேவரைட் தொடராக இருந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் தற்போது அமிர்தாவின் கணவர் விபத்தில் இறந்துவிட்டார் என்று சொல்லி அமிர்தாவை எழிலுக்கு திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். ஆனால் அவர் இறக்காமல் மீண்டும் வீட்டிற்கு வந்து விடுகிறார். அவர் அமிர்தா குறித்து கேள்வி எழுப்பும் பொழுது அவரை பற்றி தெரியாது அவரை பார்த்து நீண்ட நாட்களாகி விட்டது என்று சொல்லி கணேஷின் பெற்றோர்கள் சமாளித்து வைத்துள்ளனர்.

விளம்பரம்

நிலா பாப்பா உன் அப்பா நான் தான் டா.! உண்மைகளை தெரிந்துகொன்டு கதறி அழும் கணேஷ்.! 3

இந்த நிலையில் கணேஷ் இன்று தனது தந்தையின் மொபைல் போனை எடுத்துப் பார்க்கிறார். அப்போது அமிர்தா குழந்தையுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இருக்கிறது. அது குறித்து அவர் பெற்றோர்களிடம் கேள்வி எழுப்புகிறார். அப்போது கணேஷின் தாயார் தெரியாமல் இது உன் குழந்தை என்று உளறி விடுகிறார். இதனால் மனமுடைந்த கணேஷ், நிலா, “உன் அப்பா நான் தான்டா” என்று சொல்லி தரையில் விழுந்து கதறி அழுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்…! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment