குடும்பத்துடன் இணைந்து குத்தாட்டம் போடும் லாரன்ஸ்.! சந்திரமுகி 2 படத்தில் இருந்து அடுத்த சிங்கிள் வீடியோ.!

மிகவும் எதிர்பார்க்கப்படும் சந்திரமுகி 2 திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது படத்தில் இருந்து அடுத்த சிங்கிள் பாடலாக “தொரி பொறி தோம்தன்னனா” என்கிற பாடல் வெளியாகியிருக்கிறது. இதில் வடிவேலு, ராகவா லாரன்ஸ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் இணைந்து நடனமாடி இருக்கின்றனர். குடும்பப் பாங்காக இந்த பாடல் வெளியாகி இருக்கிறது. சந்திரமுகி பாகம் 1-ல் அனைவரும் இணைந்து நடனமாடும் ‘அத்திந்தோம்’ பாடல் போல இந்த பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் இணைந்து குத்தாட்டம் போடும் லாரன்ஸ்.! சந்திரமுகி 2 படத்தில் இருந்து அடுத்த சிங்கிள் வீடியோ.! 1
லைக்கா புரொடக்சன்ஸ் சார்பில் பி வாசு இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் தான் சந்திரமுகி பாகம் 2. இந்த படத்தில் வடிவேலு, ராதிகா சரத்குமார், ராகவா லாரன்ஸ், கங்கனா ராவத், ஸ்ருஷ்டி டாங்கே, லட்சுமிமேனன் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படம் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியாகி வருகிறது. இந்த படத்திற்கு கீரவாணி இசையமைத்திருக்கிறார். படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  காலில் அறுவை சிகிச்சை..! இருந்தும் வேட்டையன் இசைவெளியீட்டு விழாவில் ஆட்டம் போட்ட DD..! வைரலாகும் வீடியோ..!

குடும்பத்துடன் இணைந்து குத்தாட்டம் போடும் லாரன்ஸ்.! சந்திரமுகி 2 படத்தில் இருந்து அடுத்த சிங்கிள் வீடியோ.! 3
இந்த நிலையில் படத்திலிருந்து அடுத்த அப்டேட் ஆக “தொரி பொறி தோம்த்தன்னனா” என்கிற பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடலை யுகபாரதி எழுத, ஹரிச்சரன் மற்றும் அமலா சிபோலு ஆகிய இருவரும் இணைந்து பாடி இருக்கின்றனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த பாடலைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Sony Music South

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment