சமந்தாவை கொஞ்சி தள்ளும் விஜய் தேவாரகொண்டா.! ‘ஆராத்யா’ முழு வீடியோ வெளியானது.!

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ‘குஷி’ படத்திலிருந்து தற்போது ‘ஆராத்யா: பாடலின் முழு வீடியோ வெளியாகியிருக்கிறது. பலரும் இந்த பாடலின் வீடியோவை பார்த்து ரசித்து வருகின்றனர். தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவார கொண்டா சமந்தாவுடன் இணைந்து நடித்த திரைப்படம் தான் ‘குஷி’. இந்தப் படத்தை இயக்குனர் ஷிவா நிர்வானா இயக்கியிருந்தார். கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாகி இருந்தது. ரொமான்டிக் காமெடி கலந்த இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலிலும் பட்டையைக் கிளப்பி இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சமந்தாவை கொஞ்சி தள்ளும் விஜய் தேவாரகொண்டா.! 'ஆராத்யா' முழு வீடியோ வெளியானது.! 1
ஆரம்பத்தில் நல்ல படங்களில் நடித்து வந்த விஜய் தேவார கொண்டாவிற்கு கடைசியாக சில படங்கள் தோல்வியை கொடுத்தது. இவர் கடைசியாக நடித்திருந்த லைகர் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதேபோல சமந்தாவின் சாகுந்தலம் படமும் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்திருந்தது. இந்த நிலையில் குஷி திரைப்படம் மூலமாக இருவரும் ஒரு அளவிற்கு கம் பேக் கொடுத்திருக்கின்றனர். இந்த திரைப்படம் உலக அளவில் 90 கோடி வசூலை கொடுத்திருப்பதாக சமீபத்தில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  நயன்தாராவை ஓவர் டேக் செய்த குட்டி குஷ்பூ.! திருமண வீடியோவின் டீசர் வெளியானது.!

சமந்தாவை கொஞ்சி தள்ளும் விஜய் தேவாரகொண்டா.! 'ஆராத்யா' முழு வீடியோ வெளியானது.! 3
படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்துமே ஓரளவிற்கு வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக சித் ஸ்ரீராம் குரலில் வெளியான ‘ஆராத்யா” பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தது. இந்த நிலையில் தற்போது படத்தில் இருந்து இந்த பாடலின் முழு வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment