ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஓவியாவுடன் ஒரே மேடைக்கு வந்த ஜூலி.! வீடியோ இதோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு தற்போது பிக்பாஸ் சீசன் 1 மற்றும் பிக்பாஸ் சீசன் 2 ஆகிய இரண்டிலிருந்தும் ஆறு பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் பிக்பாஸ் சீசன் 1ல் சர்ச்சைக்குரிய போட்டியாளராக வலம் வந்த ஓவியா, ஜூலி ஆகிய இருவரும் ஒரே அணியில் பங்கெடுத்துள்ளனர். நீண்ட வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய போட்டியாளராக வலம் வந்தவர்கள் தான் ஓவியா மற்றும் ஜூலி. ஓவியா சொல்லாததை எல்லாம் சொல்லியதாக ஜூலி கூறியதால் குறும்படம் போட்டுக் காட்டப்பட்டது. இது அப்போது படு வைரலானது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஓவியாவுடன் ஒரே மேடைக்கு வந்த ஜூலி.! வீடியோ இதோ 1

விளம்பரம்

அன்று தொடங்கி இன்று வரை ஜூலியை பலரும் வசைப்பாடி வருகின்றனர். ஜூலியை திட்டாத ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவரது பெயர் டேமேஜ் ஆனது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு ஏற்பட்ட களங்கத்தை மாற்றி வருகிறார் ஜூலி. தற்போது படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் டிவியின் டாப் ஹிட் நிகழ்ச்சியில் ஒன்றாக இருக்கும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு ஜூலி ஓவியாவுடன் வருகை தந்துள்ளார். சுமார் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் இணைந்து ஒரே மேடையில் தோன்றுவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்புடையவை  மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்துள்ள கடைசி படம்.! சில காட்சிகளை வெளியிட்டுள்ள படக்குழு.!

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஓவியாவுடன் ஒரே மேடைக்கு வந்த ஜூலி.! வீடியோ இதோ 3

விளம்பரம்

பிக்பாஸ் சீசன் 1-ல் இருந்து ஓவியா, ஜூலி, சுஜா வருணி ஆகிய மூன்று பேர் கலந்து கொள்ள, சீசன் 2வில் இருந்து ஷாரிக், ரித்திகா, சென்றாயன் ஆகிய மூன்று பேர் எதிரணியில் போட்டிப் போடுகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment