தெருக்குரல் அறிவும், விஜய் ஆண்டனியும் இணைந்து பாடியுள்ள முதல் பாடல்.! வீடியோ உள்ளே.!

விஜய் ஆண்டனி நடித்து வரும் ‘ரத்தம்’ படத்திலிருந்து தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இசையமைப்பாளராக இருந்து நடிகராக உருவெடுத்தவர் விஜய் ஆண்டனி. தற்போது ரத்தம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தெருக்குரல் அறிவும், விஜய் ஆண்டனியும் இணைந்து பாடியுள்ள முதல் பாடல்.! வீடியோ உள்ளே.! 1

விளம்பரம்

இந்தத் திரைப்படம் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி வெளியிடப்படும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் சில படங்களின் வரவால் இந்த படத்தின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. படம் வருகிற அக்டோபர் ஆறாம் தேதி வெளியாக இருக்கிறது. க்ரைம் த்ரில்லரை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் தற்போது படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். விஜய் ஆண்டனியுடன் இணைந்து தெருக்குரல் அறிவு இந்தப் பாடலை பாடியிருக்கிறார்.

தொடர்புடையவை  திடீரென இடிந்து விழுந்த மேடை..! நடிகை Priyanka Mohan-க்கு பலத்த அடி..! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய Priyanka Mohan..!

தெருக்குரல் அறிவும், விஜய் ஆண்டனியும் இணைந்து பாடியுள்ள முதல் பாடல்.! வீடியோ உள்ளே.! 3

விளம்பரம்

ராப் பாடல் போல அமைந்துள்ள இந்தப் பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சி எஸ் அமுதன் இயக்கத்தில் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் சார்பில் கமல் போக்ரா, தனஜெயன், பிரதீப் பங்கஜ் போக்ரா ஆகியோர் படத்தை தயாரித்திருக்கின்றனர். தற்போது வெளியாகியிருக்கும் அந்த பாடலை கேட்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment