ஷிவா நிர்வானா இயக்கத்தில் சமந்தா விஜய் தேவார கொண்டா ஆகியோர் நடித்துள்ள ‘குஷி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த படத்தில் நடித்த நடிகர் விஜய் தேவார கொண்டா ஏழை குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவி செய்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படம் வெற்றி பெற்றதால் விஜய் தேவார கொண்டா இந்த பரிசுத் தொகையை 100 குடும்பத்தினருக்கு அளித்து உதவி செய்திருக்கிறார். தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவார கொண்டா. இவர் சமந்தாவுடன் இணைந்து ‘குஷி’ என்கிற படத்தில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் உருவாகியிருந்த இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

இந்தப் படம் 100 கோடி வசூலை நெருங்கி இருப்பதாக படக்குழுவினர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். தொடர்ந்து படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் படம் வெற்றி பெற்றால் ஏழை குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் தர இருப்பதாக விஜய் தேவார கொண்டா அறிவித்திருந்தார். அதன்படியே இன்று பல குடும்பங்களை சந்தித்திருந்த அவர் 100 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கியிருக்கிறார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை விஜய் தேவார கொண்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

வீடியோவை பகிர்ந்த விஜய் தேவார கொண்டா, “நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் உணர்கிறேன், நீங்களும் அப்படித்தான் இருப்பீர்கள் என்பதை நம்புகிறேன், இந்த முறை என்னால் அடைய முடியாத அளவிற்கு என் வாழ்நாள் இருக்கும் வரை, நான் ஆரோக்கியமாக இருக்கும் வரை, ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது செய்து கொண்டே இருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார். விஜய் தேவார கொண்டாவின் இந்த செயலுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
View this post on Instagram
Instagram Video Credits: Vijay Devarakonda