பிரபலம் தாமரைச்செல்வி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மற்றும் தனது ரசிகர்கள் கொடுத்த உதவியுடன் தனது தாயாருக்கு புது வீடு ஒன்றை கட்டிக் கொடுத்திருக்கிறார். அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் தற்போது அந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சிறு வயதிலேயே தனது குடும்ப வறுமை காரணமாக மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர்தான் தாமரைச்செல்வி. பல ஆண்டுகளாக மேடை நாடக கலைஞராக இருந்த இவர், பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலமாக மறுவாழ்வு பெற்றார். இதன் பின்னர் இவருக்கு செல்வாக்கு கூடியது. பின்னர் இவர் பாரதி கண்ணம்மா என்கிற விஜய் தொலைக்காட்சியின் சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியல் முடிந்த பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தாமரைச்செல்வியின் தாயார் குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தினர். இத்தனை நாட்களாக அவர்கள் குடிசை வீட்டில் அடிப்படை வசதிகள் இல்லாமல் கூட வாழ்ந்து வந்தனர். இதை பார்த்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தாமரையின் ரசிகர்கள் அனைவரின் பண உதவியுடன் அவர்களுக்கு புது வீடு ஒன்றை கட்டிக் கொடுத்திருக்கிறார். இதன் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில் தாமரையின் தந்தை திடீரென காலமாகி இருந்தார். இதனால் இந்த நிகழ்ச்சி தள்ளி போய்க்கொண்டே இருந்தது. தற்போது ஜேம்ஸ் வசந்தன் ரசிகர்கள் உதவியுடன் கட்டிக் கொடுத்த புது வீட்டின் கிரகப்பிரவேசம் நடந்துள்ளது. அந்த வீடியோவை தாமரை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோவில் தான் வீடு கட்ட உதவிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். மேலும் வீட்டில் பால் காய்ச்சி சர்க்கரை பொங்கல் வைத்து அவர் புது வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சியை முடித்துள்ளார். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: James Vasanthan