பிக்பாஸ் சீசன் 7 இறுதி போட்டியாளர்கள் இவங்கதான்.! இவங்கல்லாம் யாருனு தெரிஞ்சிக்கலாமா?

பிக்பாஸ் சீசன் 7 நாளை கோலாகலமாக தொடங்க உள்ள நிலையில், தற்போது இந்த சீசனில் கலந்து கொள்ளும் 20 போட்டியாளர்கள் பற்றி தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் யார் என்பது குறித்து விரிவாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பிக்பாஸ் சீசன் 7 இறுதி போட்டியாளர்கள் இவங்கதான்.! இவங்கல்லாம் யாருனு தெரிஞ்சிக்கலாமா? 1
முதலாவதாக உள்ளே செல்ல இருப்பவர் ரவீனா தாஹா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் 2 என்கிற சீரியலில் நடித்தவர் அதற்கு முன்பாக இவர் ஜில்லா, ஜீவா, பூஜை, புலி, ராட்சசன், பீட்சா 3 போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம், வசந்தம், ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் 2 போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.

விளம்பரம்

பிக்பாஸ் சீசன் 7 இறுதி போட்டியாளர்கள் இவங்கதான்.! இவங்கல்லாம் யாருனு தெரிஞ்சிக்கலாமா? 3
இரண்டாவதாக உள்ளே செல்ல இருக்கும் நபர் யுகேந்திரன் வாசுதேவன். இவர் பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவனின் மகன் ஆவார். பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும், துணை வேடங்களிலும் நடித்துள்ள இவர், தற்போது பிக்பாஸில் போட்டியாளராக களம் இறங்குகிறார்.

பிக்பாஸ் சீசன் 7 இறுதி போட்டியாளர்கள் இவங்கதான்.! இவங்கல்லாம் யாருனு தெரிஞ்சிக்கலாமா? 5
மூன்றாவதாக கூல் சுரேஷ். சமூக வலைதளங்களில் வைரல் நபராக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் மற்ற நடிகர்களின் படங்களை பார்த்துவிட்டு அதற்கு “வெந்து தணிந்தது காடு” என்று ஆரம்பித்து ரிவ்யூ சொல்லும் இவருக்கு தற்போது பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவரும் சீசன் 7ல் போட்டியாளராக களமிறங்குகிறார்.

விளம்பரம்

பிக்பாஸ் சீசன் 7 இறுதி போட்டியாளர்கள் இவங்கதான்.! இவங்கல்லாம் யாருனு தெரிஞ்சிக்கலாமா? 7
அடுத்த போட்டியாளர் பப்லு பிருதிவிராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து பிரபலமானவர். குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து பின்னர் பல படங்களில் நடித்திருப்பவர். தமிழில் அவள் வருவாளா, நாகேஸ்வரி, வாரணம் ஆயிரம், பயணம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். வாணி ராணி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் 24 வயது பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வைரல் நபராக வலம் வரும் அவரும் பிக் பாஸில் போட்டியாளராக கலந்து கொள்கிறார்.

தொடர்புடையவை  வெறித்தனமாக வெளியாகிய நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா டீசர்..!

பிக்பாஸ் சீசன் 7 இறுதி போட்டியாளர்கள் இவங்கதான்.! இவங்கல்லாம் யாருனு தெரிஞ்சிக்கலாமா? 9
அடுத்த போட்டியாளர் பூர்ணிமா ரவி. இவர் சமூக வலைதளங்களில் குறிப்பாக youtube இல் வீடியோக்களை வெளியிட்டதன் மூலமாக பிரபலமானவர். வேலூரில் பிறந்து வளர்ந்த பூர்ணிமா ரவி, நரிக்கூட்டம், அராத்தி போன்ற யூடியூப் தொடர்களின் நடித்துள்ளார். மேலும் ஒழுக்கம் கேளாயோ, காரிகை, கோளாறு காதல் போன்ற சில குறும்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இவரும் தற்போது பிக்பாஸில் முக்கிய போட்டியாளராக கலந்து கொள்கிறார்.

விளம்பரம்

பிக்பாஸ் சீசன் 7 இறுதி போட்டியாளர்கள் இவங்கதான்.! இவங்கல்லாம் யாருனு தெரிஞ்சிக்கலாமா? 11

அடுத்த போட்டியாளர் பிரதீப் ஆண்டனி. 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அருவி’ என்கிற படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியிருந்தார். அந்த படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். 2019ம் ஆண்டு வெளியான ‘வாள்’ என்கிற படத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் சீசன் 3ன் போது கவின் நண்பராக உள்ளே வந்த அவர் கவினின் விளையாட்டு பிடிக்கவில்லை என்று சொல்லி அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார். இந்த நிலையில. சீசன் 7ல் போட்டியாளராக பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

பிக்பாஸ் சீசன் 7 இறுதி போட்டியாளர்கள் இவங்கதான்.! இவங்கல்லாம் யாருனு தெரிஞ்சிக்கலாமா? 13

அடுத்ததாக வளர்ந்து வரும் நடிகர் நிக்ஸன், பிக் பாஸில் பங்கேற்க இருக்கிறார். இவர் ‘திமிரு புடிச்சவன்’ என்கிற படத்தில் விஜய் ஆண்டனியுடன் இருக்கும் மூன்று பேரில் ஒருவராக நடித்திருந்தார். அதன் பின்னர் ‘பேதை’ என்ற குறும்படத்தில் ஹீரோவாக நடித்து மூன்று விருதுகளையும் வென்றிருந்தார். மேலும் ராப் பாடகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த சீசனில் ராப் பாடகர் அசல் கோலார் போல இவரும் இந்த சீசனில் ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

பிக்பாஸ் சீசன் 7 இறுதி போட்டியாளர்கள் இவங்கதான்.! இவங்கல்லாம் யாருனு தெரிஞ்சிக்கலாமா? 15

அடுத்த போட்டியாளர் வினுஷா தேவி. பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்ட இவர், தற்போது பிக் பாஸுக்கு செல்ல இருக்கிறார். டிக் டாக் செயலியில் வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர், கறுப்பாக இருந்த காரணத்தினால் பலராலும் விமர்சிக்கப்பட்டார். ஆனால் இவருக்கு திருப்பு முனையாக அமைந்த பாரதி கண்ணம்மா சீரியல் தான். ரோஷினி ஹரிப்பிரியன் இந்த சீரியலில் இருந்து விலகிய பின்னர் கண்ணம்மாவாக நடித்து பலரின் மனம் கவர்ந்த இவர், இந்த சீரியல் முடிவடைந்த பிறகு தற்போது பிக்பாஸில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
தொடர்புடையவை  தேனிலவுக்கு கிளம்பிய ஆதிரை - கரிகாலன்.! புதிய தொழில் தொடங்கும் விஷயத்தை சொன்ன சக்தி.!

பிக்பாஸ் சீசன் 7 இறுதி போட்டியாளர்கள் இவங்கதான்.! இவங்கல்லாம் யாருனு தெரிஞ்சிக்கலாமா? 17

அடுத்த போட்டியாளர் பிரபல நடன கலைஞரான மணி சந்திரா. இவரும் மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா தாஹாவும் இணைந்து சமூக வலைதளங்களில் பல வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசு கிசுக்கப்பட்ட நிலையில் தற்போது இவரும் பிக்பாஸுக்கு செல்ல இருப்பதால் காதல் கண்டன்டுக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

பிக்பாஸ் சீசன் 7 இறுதி போட்டியாளர்கள் இவங்கதான்.! இவங்கல்லாம் யாருனு தெரிஞ்சிக்கலாமா? 19
அடுத்தப் போட்டியாளர் அக்‌ஷயா உதயகுமார். கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர், இன்ஸ்டாகிராம் மாடலாகவும், சோஷியல் மீடியா Influencer ஆகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் லவ் டுடே, மலையாளத்தில் சித்தி போன்ற படங்களில் நடித்துள்ள இவர், தற்போது பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 7 இறுதி போட்டியாளர்கள் இவங்கதான்.! இவங்கல்லாம் யாருனு தெரிஞ்சிக்கலாமா? 21
அடுத்த போட்டியாளர் வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா விஜயகுமார். ஏற்கனவே வனிதா விஜயகுமார் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு ஒரு கலக்கு கலக்கிய நிலையில் இந்த முறை அவரது மகள் ஜோவிகா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வனிதாவைப் போலவே அவரது மகளும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக வலம் வருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விளம்பரம்

பிக்பாஸ் சீசன் 7 இறுதி போட்டியாளர்கள் இவங்கதான்.! இவங்கல்லாம் யாருனு தெரிஞ்சிக்கலாமா? 23
அடுத்த போட்டியாளர் சரவணன் விக்ரம். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். சில குறும்படங்களிலும் நடித்திருக்கும் சரவணன் விக்ரமுக்கு தற்போது பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 இறுதி போட்டியாளர்கள் இவங்கதான்.! இவங்கல்லாம் யாருனு தெரிஞ்சிக்கலாமா? 25
அடுத்த போட்டியாளர் நடன கலைஞர் ஐஷூ. இவர் பிக் பாஸ் சீசன் 5வில் கலந்து கொண்ட அமீரின் நண்பர் மற்றும் உறவினர் என்று கூறப்படுகிறது. இவரும் சீசன் 7ல் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  "நான் பாட்டுக்கு ஜாலியா ஆடுறேன்...நீங்க போட்டோ எடுங்க....போட்டோஷூட் போது குத்தாட்டம் போட்ட சிவாங்கி"!!

பிக்பாஸ் சீசன் 7 இறுதி போட்டியாளர்கள் இவங்கதான்.! இவங்கல்லாம் யாருனு தெரிஞ்சிக்கலாமா? 27
அடுத்த போட்டியாளர் அனன்யா ராவ். இவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பிக் பாஸ் சீசன் 4லும் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸின் நண்பர் என்று கூறப்படுகிறது. பாலாஜி முருகதாஸ் இந்த சீசனில் கலந்து கொண்ட போது இவரும் அதே சீசனில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினார் என்று கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 7 இறுதி போட்டியாளர்கள் இவங்கதான்.! இவங்கல்லாம் யாருனு தெரிஞ்சிக்கலாமா? 29

அடுத்த போட்டியாளர் விஷ்ணு விஜய். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதையில் நடித்திருந்தார். பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா என்கிற சீரியலில் நடித்திருந்தார். பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர் ஆயிஷாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொள்கிறார்.

பிக்பாஸ் சீசன் 7 இறுதி போட்டியாளர்கள் இவங்கதான்.! இவங்கல்லாம் யாருனு தெரிஞ்சிக்கலாமா? 31
அடுத்த போட்டியாளர் பவா செல்லதுரை. வழக்கமாக பிக்பாஸில் அரசியல்வாதி, திருநங்கைகள் என களமிறங்கி வரும் நிலையில் முதன்முறையாக எழுத்தாளர் ஒருவர் செல்ல இருக்கிறார். ஆனந்த விகடன் இதழில் சமீபத்தில் வெளியான ‘சொல்வழிப் பயணம்’ என்கிற தொடரை எழுதி பிரபலமானவர் பவா செல்லதுரை. இவரும் இந்த முறை பிக்பாஸ் போட்டியாளராக களம் இறங்குகிறார்.

பிக்பாஸ் சீசன் 7 இறுதி போட்டியாளர்கள் இவங்கதான்.! இவங்கல்லாம் யாருனு தெரிஞ்சிக்கலாமா? 33
அடுத்த போட்டியாளர் விஜய் வர்மா. இவர் நடன கலைஞராக இருக்கிறார். instagram மாடலாகவும் சினிமா துறையில் வளர வேண்டும் என்று ஆர்வத்துடன் இருக்கும் விஜய் வர்மாவுக்கு பிக் பாஸ் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 இறுதி போட்டியாளர்கள் இவங்கதான்.! இவங்கல்லாம் யாருனு தெரிஞ்சிக்கலாமா? 35
அடுத்த போட்டியாளர் விசித்ரா. விசித்ரா பல வெள்ளித்திரை படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். சமீபத்தில் நிறைவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கூட பங்கெடுத்திருந்தார். இந்த நிலையில் விசித்ராவும் பிக்பாஸுக்கு செல்ல இருக்கும் தகவல் உறுதியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 இறுதி போட்டியாளர்கள் இவங்கதான்.! இவங்கல்லாம் யாருனு தெரிஞ்சிக்கலாமா? 37

இறுதியாக நடிகை மாயாகிருஷ்ணன். இவர் தொடரி, வேலைக்காரன், விக்ரம், லியோ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகிறார். இவரும் பிக்பாஸில் கலந்து கொள்ள இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 இறுதி போட்டியாளர்கள் இவங்கதான்.! இவங்கல்லாம் யாருனு தெரிஞ்சிக்கலாமா? 39

விளம்பரம்

Leave a Comment