நடிகை ராதிகா சரத்குமார் தனது பேரன் மற்றும் பேத்திகளுடன் லண்டனில் உள்ள டிஸ்னி வேர்டில் சுற்றுலாவிற்கு சென்றுள்ளார். அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

80 மட்டும் 90களில் தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா. அன்று தொடங்கியழ இன்று வரை தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார்.

‘கிழக்கே போகும் ரயில்’ என்கிற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான இவர், அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து அசத்தியிருக்கிறார்.

நடிப்பது மட்டுமில்லாமல் படங்களை இயக்குவது, தயாரிப்பது, சின்னத்திரை நாடகங்களை இயக்குவது, சின்னத்திரையில் நடிப்பது என்று ஒரு கலக்கு கலக்கி வருகிறார் ராதிகா சரத்குமார்.

இவர் நடிகர் சரத்குமாரை கடந்த 2001 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ‘கோடீஸ்வரன்’ என்ற நிகழ்ச்சியை ராதிகாவின் தயாரிப்பு நிறுவனமான ரேடான் மீடியா தயாரித்திருந்தது.

இப்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சரத்குமாருடன் ராதிகாவிற்கு காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ராகுல் என்கிற மகனும் இருக்கிறார்.

ராதிகாவின் திருமண வாழ்க்கையைப் பொருத்தவரை அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருந்தது. அதில் இரண்டாவது கணவருக்கு ரயான் என்கிற மகள் இருக்கிறார்.

ரயானுக்கு கிரிக்கெட் வீரர் வருண் என்பருடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

ராயனின் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ராதிகா சரத்குமார். குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியில் செல்வது, டூருக்கு செல்வது என்று நேரம் செலவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது மகள் ரயான் மற்றும் பேரக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு லண்டனில் பாரிஸின் டிஸ்னி வேர்ல்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் ராதிகா.

இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O