பிக் பாஸ் சீசன் 7ன் போட்டியாளர்களாக இருக்கும் சரவண விக்ரமின் தங்கை வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது அண்ணன் பற்றி தவறாக பேச வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். ஆரம்பத்தில் இந்த போட்டியில் 18 போட்டியாளர்களும், பின்னர் ஐந்து வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என்று 23 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 48 நாட்களை நிறைவு செய்துள்ளது. முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு ஸ்மால் பாஸ், பிக் பாஸ் என வீடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் போட்டியாளராக கலந்து கொண்ட சரவணன் விக்ரம் குறித்து வெளியில் பல ட்ரோல்கள் மற்றும் மீம்ஸ்கள் பறந்து வருகிறது. பலரும் சரவண விக்ரமை கலாய்த்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் அவர் எந்தவித பங்கெடுப்பும் இல்லாமல் சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். எந்த சண்டையிலும் பங்கெடுத்துக் கொள்வதில்லை, சண்டை வந்தாலும் அதில் கருத்து சொல்வதில்லை. இதனால் அவர் சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற ஹவுஸ்மேட்சும் அவரிடம் எடுத்துக் கூறியும் அவர் சுவாரஸ்யம் இல்லாத போட்டியாளராகவே தொடர்கிறார்.

இதனிடையே சரவண விக்ரமின் தங்கை சூர்யா தனது அண்ணனை கலாய்த்து வீடியோ வெளியிருப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், “பிக் பாஸ் நிகழ்ச்சியை முழுதாக பார்க்கும் அளவிற்கு நிறைய பேருக்கு நேரமில்லை. நாம் போடும் மீம்ஸ் மற்றும் ட்ரோல்ஸ்களை வைத்து தான் பிக் பாஸில் இவ்வாறெல்லாம் நடக்கும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவரை பற்றி பதிவிடும்போது கவனமாக பதிவிடுங்கள். பாசிட்டிவாக சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். இல்லை என்றால் நெகட்டிவ் விஷயங்களை கூட சொல்லலாம். ஆனால் நெகட்டிவ் விஷயத்தை உருவாக்கி பொய்யான விஷயத்தை பரப்பாதீர்கள் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அவரின் வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O