காவேரி – நிவின் காதலை குறும்படமாக போட்டு காண்பித்த பசுபதி.! அதிரடி திருப்பங்களுடன் ‘மகாநதி’.!

விஜய் டிவியின் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் தான் ‘மகாநதி’. இந்த சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. “நான்கு சகோதரர்களின் கதை” என்று ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொடரில் தற்போது காவேரி மற்றும் நிவின் ஜோடியை மாற்ற இயக்குனர் திட்டமிட்டு இருக்கிறார். இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக விஜயை காவேரி திருமணம் செய்து கொள்வாரா? இல்லையா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காவேரியும் நிவினும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். ஆனால் விதிவசத்தால் காவேரி தனது குடும்பத்துடன் வேறு ஊருக்கு சென்று வசித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காவேரி - நிவின் காதலை குறும்படமாக போட்டு காண்பித்த பசுபதி.! அதிரடி திருப்பங்களுடன் 'மகாநதி'.! 1

விளம்பரம்

அங்கு விஜய் என்பவருடன் ஒரு வருடம் திருமணத்திற்கான ஒப்பந்தத்தை காவேரி போட்டுக் கொள்கிறார். நிர்பந்தத்தின் பெயரால் அவர் இந்த நிலைக்கு தள்ளப்படுகிறார். விஜய்க்கும் காவேரிக்கும் திருமண வரவேற்பு நடைபெற்று வருகிறது. இதில் காவேரியின் குடும்பத்தினருடன் அவரின் பழைய காதலனான நிவினும் வந்திருக்கிறார். அப்போது அங்கு வரும் பசுபதி விஜயிடம் ஒரு கிஃப்ட் ஒன்றைக் கொடுக்கிறார். அதைப் பார்த்த போது நிவினும் காவிரியும் காதலிக்கும் பொழுது எடுத்த வீடியோவை போட்டுக் காண்பிக்கிறார். இதை பார்த்த விஜய் அதிர்ச்சி அடைந்து காவேரியை முறைத்து பார்க்கிறார்.

தொடர்புடையவை  முடிவுக்கு வந்த முத்தழகு சீரியல்..! இறுதிநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான வீடியோ..!

காவேரி - நிவின் காதலை குறும்படமாக போட்டு காண்பித்த பசுபதி.! அதிரடி திருப்பங்களுடன் 'மகாநதி'.! 3
காவேரியும் பசுபதியின் இந்த செயலால் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார். இனி என்ன நடக்கப்போகிறது? விஜய் என்ன முடிவெடுப்பார்? காவேரியிடம் இருந்து விலகுவாரா? நிவினுக்கும் காவேரிக்கும் திருமணம் நடைபெறுமா? என்ற பல கேள்விகளுடன் இந்த ப்ரோமோ முடிவடைந்துள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்…! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment