கோபத்தில் பத்திரகாளியாக மாறிய ஜனனி..! பயந்து போய் பார்த்த ஆதிகுணசேகரன்..! ‘எதிர்நீச்சல்’ ப்ரோமோ

எதிர்நீச்சல் சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது அப்பத்தாவின் புகைப்படத்திற்கு மாலை போட்டு காரியம் செய்வதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு கூறும் ஆதி குணசேகரை ஜனனி வெளுத்து வாங்குகிறார். மேலும் ஆதி குணசேகரனின் தாய்மாமா இந்த கணக்கு ஆண்டவன் போட்ட கணக்கு மாதிரி தெரியவில்லை, மனிதன் போட்ட கணக்கு மாதிரி இருப்பதாக கூறுகிறார். ஜனனியின் கோபத்தால் ஆதி குணசேகரன் வாய் பேச முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது சன் டிவி வெளியிட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோபத்தில் பத்திரகாளியாக மாறிய ஜனனி..! பயந்து போய் பார்த்த ஆதிகுணசேகரன்..! 'எதிர்நீச்சல்' ப்ரோமோ 1

விளம்பரம்

சொத்து விவகாரத்தில் அப்பத்தாவிற்கும் அவரது பேரன்களாக இருக்கும் ஆதி குணசேகரன், ஞானம், கதிர் ஆகியோருக்கு இடையே பல நாட்களாக மோதல் நீடித்து வந்தது. இந்த நிலையில் அந்த சொத்தின் பாதி பகுதியை “கிரீடம்” என்கிற பெண்களுக்கு முன்னேற்றத்திற்கான அமைப்பை ஏற்படுத்திவிட்டு அதன் டிரஸ்ட் உறுப்பினராக ஜீவானந்தத்தை அப்பத்தா நியமித்தார். மீதம் இருந்த சொத்துக்களை தனது கொள்ளு பேரன்கள் மற்றும் பேத்திகள் பெயரில் எழுதி வைத்தார். இதனால் கோபம் அடைந்த ஆதி குணசேகரன் அப்பத்தாவுக்கு பாலில் ஏதோ கலந்து கொடுத்த மயக்கம் அடைய வைக்கிறார். அவரைத் தூக்கிக்கொண்டு செல்லும் வழியில் கார் வெடித்து அப்பத்தா இறந்து விட்டதாக காட்டப்படுகிறது.

தொடர்புடையவை  விளக்கு பூஜையில் கலந்துகொண்ட சிறகடிக்க சீரியல் நாயகி மீனா..! செம்ம கியூட்டான புகைப்படங்கள்..!

கோபத்தில் பத்திரகாளியாக மாறிய ஜனனி..! பயந்து போய் பார்த்த ஆதிகுணசேகரன்..! 'எதிர்நீச்சல்' ப்ரோமோ 3
ஆனால் அப்பத்தா இறந்திருக்க மாட்டார் அவரை கௌதம் காப்பாற்றி வைத்திருப்பார் என்று சொல்லி ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ராமேஸ்வரத்தில் அஸ்தியை கரைத்து விட்டு வீட்டிற்கு வரும் ஆதி குணசேகரன் அப்பத்தாவின் புகைப்படத்திற்கு மாலை போட்டு காரியம் செய்ய முயற்சி செய்கிறார். அப்போது ஜனனி, “புகைப்படத்திற்கு மாலை எல்லாம் போடக்கூடாது, இதற்கு நான் அனுமதிக்க மாட்டேன், அப்படி நீங்கள் செய்தால் வேறு விதமாக ஆக்ஷன் எடுப்பேன்” என்று சொல்லி ஆதி குணசேகரனை மிரட்டுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment