பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது போல, பூகம்பம் டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் முதல் டாஸ்க் வைத்துள்ள ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. கடந்த சீசன்களைப் போல் அல்லாமல் இந்த சீசனில் எதிர்பாராத பல திருப்பங்களை பிக்பாஸ் குழுவினர் அரங்கேற்றி வருகின்றனர். முன்பெல்லாம் 16 போட்டியாளர்கள் மற்றும் 50 நாளுக்குப் பின்னர் ஒரு வைல்ட் கார்டு போட்டியாளர் என்று நிகழ்ச்சி நடந்து வந்த நிலையில், இந்த முறை 18 போட்டியாளர்கள் மற்றும் 30 நாள் முடிந்த பின்னர் 5 பேரை வைலட் கார்டாக இறக்கி அதிர்ச்சி கொடுத்திருந்தனர் பிக்பாஸ் குழுவினர் ஐந்து பேரில் அன்னபாரதி மற்றும் கானா பாலா இருவரும் வந்த சில நாட்களிலேயே வெளியேறி விட, மீதம் 3 போட்டியாளர்கள் நிலைத்து விளையாடி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பிக்பாஸ் போட்டியில் சுவாரசியம் குறைந்த போட்டியாளர்களாக சிலர் இருந்து வருவதால் அவர்களை வெளியேற்றிவிட்டு எலிமினேட் ஆகி சென்ற மூன்று பேரை மீண்டும் உள்ளே கொண்டு வர பிக் பாஸ் குழு திட்டமிட்டுள்ளது. அதற்காக மூன்று பூகம்பம் டாஸ்க்குகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்குகளில் வெற்றி பெற்றால் மட்டுமே வைல்ட் கார்டு என்ட்ரி உள்ளே வராது. ஒரு வேளை இந்த டாஸ்க்குகளில் தோற்று விட்டால் மூன்று பேரை வெளியே அனுப்பிவிட்டு, பழைய போட்டியாளர்கள் மூன்று பேரை உள்ளே கொண்டு வந்து நிகழ்ச்சி சுவாரசியமாக பிக் பாஸ் திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி இந்த டாஸ்கின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது.

அதில் அடுக்கடுக்காக வரிசையாக கம்பி சட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்றிலிருந்து மற்றொரு சட்டத்திற்கு பந்தை கொண்டு வந்து, கீழே விழாமல் கடைசியாக இருக்கும் கூடையில் சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் ஹவுஸ்மேட்ஸ் வெற்றி பெற்றார்களா? என்ற சஸ்பென்ஸ் உடன் இந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி முடித்துள்ளது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television