காமெடியில் பட்டையை கிளப்பி இருக்கும் யோகி பாபு.! “குய்கோ’ ட்ரைலர் வெளியானது.! | Kuiko Trailer

நடிகர் யோகி பாபு நடித்துள்ள ‘குய்கோ’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. வெள்ளித்திரையில் காமெடி நடிகராகவும், முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் யோகி பாபு. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது விரல்விட்டு என்னும் அளவிற்கே காமெடியன்கள் இருக்கும் நிலையில் அதில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் யோகி பாபு. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முடித்திருக்கும் இவர், ஹீரோவாக ‘மண்டேலா’, ‘பொம்மைநாயகி’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் இவர் நடித்திருந்த ‘லக்கி மேன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

yogi babu kuiko trailer
yogi babu kuiko trailer

தொடர்ந்து மீண்டும் ஒரு காமெடி கதையம்சம் கொண்ட படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் யோகி பாபு. ‘குய்கோ’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் விக்ராந்த், இளவரசு, நடிகை வினோதினி, குக் வித் கோமாளி பிரபலம் முத்துக்குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை அருள் செழியன் இயக்கியிருக்கிறார். ஆண்டனி தாசன் இசையமைத்திருக்கிறார். மேலும் ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு, ராம் பாண்டியன் படத்தொகுப்பு பணிகளை செய்து இருக்கிறார். வருகிற 24ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தில் இருந்து ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  ஐஸ்வர்யா ராய் உடன் விவகாரத்தா..? உண்மையை விளக்கி சொன்ன அபிஷேக்பச்சன்..!
yogi babu kuiko trailer
yogi babu kuiko trailer

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. சந்தானத்தின் ‘80ஸ் பில்டப்’, விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய இரண்டு படங்களும் வருகிற 24ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், அவர்களுக்குப் போட்டியாக யோகி பாபுவின் ‘குய்கோ’ திரைப்படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. நீங்களும் ட்ரைலரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Think Music India

விளம்பரம்

Leave a Comment