பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அக்ஷயா மற்றும் ப்ராவோ ஆகிய இருவர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ் ஆகிய இருவரும் மீண்டும் உள்ளே வந்திருக்கின்றனர். கடந்த ஆறு சீசன்களை போல் இல்லாமல் இந்த முறை சீசன் 7 மிகவும் வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் போட்டிகளைக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது பூகம்பம் என்கிற பெயரில் டாஸ்குகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த டாஸ்குகளில் ஹவுஸ்மேட்ஸ் தோற்றதால் ப்ராவோ மற்றும் அக்ஷயா ஆகிய இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு ஏற்கனவே எலிமினேட் ஆகி சென்ற அனன்யா ராவ் மற்றும் விஜய் வர்மா ஆகியோரை மீண்டும் உள்ளே அனுப்பி இருக்கிறது பிக் பாஸ் டீம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் வர்மா வீட்டிற்குள் வருகிறார். அவருக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஹவுஸ் மேட்ஸின் புகைப்படங்கள் அடங்கிய டைல்ஸை அடித்து உடைக்கிறார். யாரெல்லாம் ஃபைனலுக்கு செல்ல தகுதி இல்லையோ அவர்களின் புகைப்படங்களை உடைக்குமாறு பிக்பாஸ் சொல்ல மாயா, பூர்ணிமா, சரவணன் விக்ரம், ரவீனா போன்ற பலரது புகைப்படங்களை உடைக்கிறார். அதேபோல தற்போது அடுத்த ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே வரும் அனன்யா ராவுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ‘நரி’ என்கிற பட்டத்தை விசித்ராவிற்கு கொடுக்கிறார். ‘விஷ பாட்டில்’ என்கிற பட்டத்தை மாயாவிற்கு கொடுக்கிறார்.

மேலும் செய்வது அனைத்துமே க்ரிஞ்சு என்கிற பட்டத்தை நிக்ஸனுக்கு வழங்குகிறார். அதற்கு அவர் சொன்ன காரணம், “ஐஷுடன் அவர் செய்த அனைத்தையும் நான் பார்த்தேன், அனைத்தும் க்ரிஞ்சாகத்தான் வெளியில் இருந்து வந்தது” என்று கூறுகிறார். மேலும் தவளை என்கிற பட்டத்தை பூர்ணிமாவிற்கும், பூமர் என்கிற பட்டத்தை மணிக்கும் கொடுக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video…!
YouTube Video Embed Code Credits: Vijay Television