போலீஸ் அதிகாரியாக மிரட்டி எடுத்துள்ள விஜய் ஆண்டனி.! ‘வள்ளி மயில்’ டீசர் இதோ.!

நடிகர் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக மிரட்டும் ‘வள்ளி மயில்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கின்றது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘தமிழரசன்’, ‘பிச்சைக்காரன் 2’, ‘கொலை’, ‘ரத்தம்’ ஆகியவை எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. தற்போது கைவசம் ‘மழைப் பிடிக்காத மனிதன்’, ‘அக்னிச் சிறகுகள்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் ‘வள்ளி மயில்’. இந்தப் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரியாக மிரட்டி எடுத்துள்ள விஜய் ஆண்டனி.! 'வள்ளி மயில்' டீசர் இதோ.! 1
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து பாரதிராஜா, சத்யராஜ், சுனில், தம்பி ராமையா, ஜிபி முத்து ஆகியோர் நடித்து வருகின்றனர். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக பரியா அப்துல்லா நடித்திருக்கிறார். தாய் சரவணன் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு பணிகளை செய்து இருக்கிறார். 1980 களில் நாடகக்கலையின் பின்னணியில் நடக்கும் ஒரு புதுமையான த்ரில்லர் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. 1980 என்பதால் திண்டுக்கல்லில் மிகப்பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட அரங்கம் அமைத்து இதன் படப்பிடிப்புகள் நடந்து முடிந்திருந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  நீங்க பண்ற காமெடி பாத்து யாருக்காவது சிரிப்பு வருதா? மைனாவை சரமாரியாக கேட்ட விஜே பார்வதி.!

போலீஸ் அதிகாரியாக மிரட்டி எடுத்துள்ள விஜய் ஆண்டனி.! 'வள்ளி மயில்' டீசர் இதோ.! 3

இந்த நிலையில் படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது டீசர் வெளியாகி இருக்கிறது. நீ நீண்ட நாட்களுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக விஜய் ஆண்டனி பட்டையை கிளப்பி இருக்கிறார். அந்த டீசரை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment