கொட்டும் மழையில் ஹவுஸ் மேட்ஸை முட்டி போட வைத்த கேப்டன் நிக்ஸன்.! தொடங்கிய சண்டை.!

பிக் பாஸ் சீசன் 7ன் 59வது நாளுக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இந்த வாரம் பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அரண்மனையின் மன்னனாக கேப்டன் நிக்ஸன் நியமிக்கப்படுகிறார். நியமிக்கப்பட்ட உடனேயே அவர் தனது சர்வாதிகார செயல்களை தொடங்குகிறார். இதனால் வீட்டில் அடுத்து சண்டை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 7ல் ரசிகர்கள் பலரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த குழு டாஸ்க்குகள் வைக்கப்படுகிறது. இரண்டு குழுக்களாக பிரிந்து செய்யப்படும் டாஸ்க்கள் சுவாரஸ்யமாகவும் அதே நேரம் சண்டை, சச்சரவு என நிரம்பிய இடமாக காட்சியளிப்பது வாடிக்கையாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொட்டும் மழையில் ஹவுஸ் மேட்ஸை முட்டி போட வைத்த கேப்டன் நிக்ஸன்.! தொடங்கிய சண்டை.! 1
கடந்த சீசனில் வைக்கப்பட்ட அரண்மனை டாஸ்க் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியிருந்தது. அசீம் மற்றும் விக்ரமனுக்கு இடையே பிரச்சனை ஏற்படுவதற்கு இந்த டாஸ்க் பிரதானமாக அமைந்திருந்தது. எனவே இந்த முறையும் இந்த அரண்மனை டாஸ்கை வைக்க பிக் பாஸ் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நிக்ஸனுக்கு முடிசூட்டு விழா நடைபெறுகிறது. பின்னர் அவர் விக்ரம், ரவீனா, ஜோவிகா ஆகிய மூவரையும் மழையில் சென்று முட்டி போட வைக்கிறார். இதை எதிர்த்து விசித்ரா மற்றும் அர்ச்சனா இருவரும் நிக்ஸனிடம் கேள்வி கேட்கின்றனர். அப்போது இது சர்வாதிகார ஆட்சி இது இப்படித்தான் இருக்கும் என்று கூறுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  பிபி ஜோடிகள் சீசன் 2 டைட்டிலை தட்டி தூக்கிய அமீர் பாவனி?? தீயாய் பரவும் தகவல்

கொட்டும் மழையில் ஹவுஸ் மேட்ஸை முட்டி போட வைத்த கேப்டன் நிக்ஸன்.! தொடங்கிய சண்டை.! 3
நிக்ஸனின் இது போன்ற செயல்பாடுகளால் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் வீட்டில் சண்டை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பாராத திருப்பங்களுடன் பொழுதுபோக்குடன் பிக் பாஸ் இல்லத்தை காண தவறாதீர்கள் என்று தற்போது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment