சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக் இன்று தனது கணவருடன் இணைந்து ‘மோரிஸ் காரேஜ்’ என்கிற உயர்ரக கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். அந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்து இருக்கிறார். சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி என பல தொலைக்காட்சி தொடர்களில் துணை வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’ என்கிற படத்தில் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த அவர் வெள்ளித்திரை பெரியளவில் கை கொடுக்காததால் சின்னத்திரை பக்கம் தலை காட்டத் தொடங்கினார் சன் டிவியில் கஸ்தூரி, இளவரசி, வாணி ராணி, தங்கம் போன்ற தொடர்களில் நடித்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சிக்கு தாவினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்கிற சீரியலின் மூலமாக அறிமுகமான அவர், பின்னர் ‘கல்யாணம் முதல் காதல் வரை’, ‘ராஜா ராணி’ போன்ற பல தொடர்களில் நடித்திருக்கிறார். தற்போது ‘மோதலும் காதலும்’ தொடரில் ஹீரோயின் சகோதரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஏற்கனவே குழந்தை இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர். இந்த நிலையில் இருந்து மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் ஸ்ரீதேவி.

அதில் தனது கணவருடன் இணைந்து ‘மோரிஸ் கேரேஜ் ஹெக்டார் பிளஸ்’ உயர் ரக கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். தங்களுடைய கனவு காரை வாங்கி விட்டதாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O