‘உறியடி’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு நடிகராக அறிமுகமானவர் விஜயகுமார் அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் ‘ஃபைட் கிளப்’ தற்போது இந்த படத்தின் டீசரைப் படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இயக்குனர், நடிகர், எழுத்தாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருபவர் விஜயகுமார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் பொறியியல் பட்டதாரி ஆவார். தனியார் நிறுவனங்களில் மென் பொறியாளராக பணியாற்றி வந்த அவருக்கு படங்களை இயக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. 2009ம் ஆண்டு ஒரு குறும்படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் 2016ம் ஆண்டு ‘உறியடி’ என்கிற படத்தை தானே எழுதி, இயக்கி, தயாரித்து அதில் நடித்தும் இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பின்னர் உரியடி பாகம் இரண்டை இயக்கி நடித்திருந்தார். மேலும் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்திற்கு எழுத்தாளராகவும் பணியாற்றி இருக்கிறார். தற்போது இவர் ‘ஃபைட் கிளப்’ என்கிற படத்தில் நடித்த முடித்து இருக்கிறார். இந்த படத்தை அப்பாஸ் ஏ ரஹ்மத் என்பவர் எழுதி இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் விஜயகுமார் உடன் இணைந்து கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ் போன்ற பலர் நடித்திருக்கின்றனர்.

படத்திற்கு கோவிந்த் வசந்தா என்பவர் இசையமைத்திருக்கிறார். ஆதித்யா என்பவர் இந்த படத்தை ‘ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில்’ தயாரித்திருக்கிறார். இந்த படம் டிசம்பர் 15ம் தேதி வெளியாக உள்ள நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் டீசர் வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sony Music South