“மழை வடிநீர் திட்டம்’ சென்னைக்கு பண்ணீங்களா? சிங்கப்பூருக்கு பண்ணீங்களா? விஷால் ஆவேசம்

சென்னையில் கடந்த 12 மணி நேரமாக மிக்ஜாம் புயலால் பெருமளது சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், நடிகர் விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அரசுக்கு சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார். ‘மழை வடிநீர் கால்வாய்’ என்று சொல்லி ஒரு ப்ராஜெக்ட் செய்தீர்களே? அது சென்னையில் செய்தீர்களா? இல்லை சிங்கப்பூரில் செய்தீர்களா? என்று அவர் கோபத்துடன் கேள்விகளை எழுப்பி இருக்கிறார். சென்னையைப் பொறுத்தவரை டிசம்பர் மாதம் வந்தாலே பெருவெள்ளம் ஏற்படுவது வாடிக்கையாக இருக்கிறது. கடந்த ஆட்சி காலத்தில் மழை நீர் வடிகால்கள் சரியாக செப்பனிடப்படவில்லை, குளங்கள், ஏரிகள் தூர்வாரப்படவில்லை. அதனால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக திமுக எதிர்கட்சியாக இருந்த போது தொடர்ந்து கூறி வந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"மழை வடிநீர் திட்டம்' சென்னைக்கு பண்ணீங்களா? சிங்கப்பூருக்கு பண்ணீங்களா? விஷால் ஆவேசம் 1

விளம்பரம்

மேலும் திமுக அரசு அமைந்த சில நாட்களிலேயே மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களை ஆங்காங்கே செயல்படுத்தி வந்தது. பணிகள் ஓரளவிற்கு முடிந்த நிலையில் டிசம்பர் மாதம் தொடங்கி விட்டதால் பருவமழையும் தொடங்கியது. மிக்ஜாம் புயலும் உடன் சேர்ந்து கொண்டதால் தற்போது சென்னை வெள்ளக்காடாக மாறி காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் வெள்ளம் வடிந்த போதிலும் நிறைய இடங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். அதில், “தான் வசிக்கும் அண்ணாநகர் பகுதியில் கூட தண்ணீர் தேங்க ஆரம்பித்துவிட்டது. அண்ணாநகர் பகுதியே தண்ணீர் தேங்க ஆரம்பித்து விட்டது என்றால் மற்ற இடங்களை பற்றி யோசித்துப் பாருங்கள்” என கூறியிருக்கிறார்.

தொடர்புடையவை  விஜயை விமர்சித்த இயக்குனர் போஸ் வெங்கட்..! கடுப்பில் விஜய் ரசிகர்கள்..!

"மழை வடிநீர் திட்டம்' சென்னைக்கு பண்ணீங்களா? சிங்கப்பூருக்கு பண்ணீங்களா? விஷால் ஆவேசம் 3
மேலும், “சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் மாநகராட்சி ஆணையர் உட்பட அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள், உங்கள் வீடுகளுக்குள் தண்ணீர் நுழையாது, உங்களுக்கு தடையற்ற உணவு மற்றும் மின்சாரம் கிடைக்கும். ஆனால் ஒரு சாதாரண வாக்காளராக, குடிமக்களாக பார்த்தால் நாங்கள் அந்த நிலையில் இல்லை. நீங்கள் செய்த மழைநீர் வடிகால் திட்டம் சிங்கப்பூருக்கு செய்தீர்களா? அல்லது சென்னைக்கு செய்தீர்களா? 2015ம் ஆண்டு இதுபோல ஒரு துன்பம் வந்த வேளையில் நாங்கள் உதவ முன்வந்தோம், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் அதே நிலை நீடிப்பதை பார்க்கும் பொழுது பரிதாபமாக இருக்கிறது.

விளம்பரம்

"மழை வடிநீர் திட்டம்' சென்னைக்கு பண்ணீங்களா? சிங்கப்பூருக்கு பண்ணீங்களா? விஷால் ஆவேசம் 5
இந்த நேரத்தில் நாங்கள் உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீருக்கு தொடர்ந்து உதவி செய்வோம், அதே சமயம் ஒவ்வொரு தொகுதியின் பிரதிநிதிகளும் வெளியே வந்து மக்களின் பயம் மற்றும் துயரத்தைப் போக்க உதவி செய்திட வேண்டும். இதை எழுதுவதற்காக நான் வெட்கத்தால் தலை குனிகிறேன். நாங்கள் அதிசயத்திற்காக காத்திருக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு குடிமக்களின் கடமைகளை நிறைவேற்ற வேண்டும், கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment