வசமாக சிக்கிய 5 பேர்.! எஸ்கேப் ஆன விக்ரம், மாயா, பூர்ணிமா.! இந்த வார நாமினேஷன் முடிவுகள்.!

பிக் பாஸ் சீசன் 7 இல் பத்தாவது வாரத்திற்கான நாமினேஷன் முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது. வெறும் ஐந்து பேர் மட்டும் இந்த வார நாமினேஷனில் வசமாக சிக்கி இருக்கின்றனர். இதனால் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சின்னத்திரை உலகில் பல கோடி ரசிகர்களைக் கொண்ட ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக் பாஸ். ஆறு சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது ஏழாவது சீசனையும் வெற்றி கரமாக ஒளிபரப்பி வருகிறது. சுமார் 63 நாட்களை கடந்துவிட்ட இந்த நிகழ்ச்சியில் இன்று 64வது நாளில் பல அதிரடி திருப்பங்கள் நடந்து வருகின்றன. காலை முதலே வெளியான ப்ரோமோவில் பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இடையே கடுமையாக சண்டை எழுந்துள்ளது.

வசமாக சிக்கிய 5 பேர்.! எஸ்கேப் ஆன விக்ரம், மாயா, பூர்ணிமா.! இந்த வார நாமினேஷன் முடிவுகள்.! 1
விஷ்ணு இந்த வார கேப்டனாக இருக்கும் நிலையில், அவர் சண்டையை சரி செய்யாமல் அவரே களத்தில் குதித்து சண்டை போடும் நபராக இருந்து வருகிறார். இதனால் இந்த வாரம் சண்டைக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தற்போது நாமினேஷன் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அதன்படி வெறும் ஐந்து பேர் மட்டுமே இந்த வார நாமினேஷனில் சிக்கி உள்ளனர். பிக் பாஸ் இல்லத்திலிருந்து தினேஷ், விசித்ரா, அர்ச்சனா, மணி என 4 பேர் நாமினேட் ஆன நிலையில் ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருந்து நிக்ஸன் மட்டும் நாமினேஷனில் சிக்கி இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  பாக்கியா வீட்டுக்கு எதிர் வீட்டில் குடி வந்த கோபி..! ராதிகாவை பார்த்து செம்ம கடுப்பான பாக்கியா.!

வசமாக சிக்கிய 5 பேர்.! எஸ்கேப் ஆன விக்ரம், மாயா, பூர்ணிமா.! இந்த வார நாமினேஷன் முடிவுகள்.! 3
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சரவண விக்ரம், மாயா, பூர்ணிமா ஆகிய யாருமே இந்த வார நாமினேஷனில் இடம் பெறவில்லை. இது போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல், பார்க்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நமது இணையதளத்தில் எடுக்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ள.! கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து வாக்களிக்கவும்.! https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment