தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி இன்று தனது முதல் திருமண நாளை தனது கணவருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஹன்சிகா நடித்து வருகிறார்.

தற்போது கைவசம் ஆறு படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. அதில் தமிழில் மட்டும் நான்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தனது நண்பரும் தொழிலதிபருமான சுஹேல் கத்தூரியாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தார்.

இருவரும் பிரான்சில் உள்ள ஈஃபிள் டவர் முன்பாக நின்று மோதிரம் மாற்றி தங்களது காதலை உறுதி செய்தனர். சுஹேல் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். சுஹேலின் முதல் மனைவியும் ஹன்சிகாவும் நெருங்கிய தோழிகள் ஆவர். அந்த திருமணத்திற்கும் ஹன்சிகா சென்று நடனமாடிருந்த வீடியோ சமீபத்தில் வைரலாகி இருந்தது.

இந்த நிலையில் 2022ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ஹன்சிகாவின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. சிகப்பு நிற லெஹங்காவில் தேவதை போல் ஜொலித்தார் ஹன்சிகா. இவர்களது திருமணம் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையில் வைத்து நடைபெற்றது.

பின்னர் தனது கணவருடன் இணைந்து ஆஸ்திரியா நாட்டுக்கு தேனிலவுக்கு சென்று இருந்தார். தொடர்ந்து தனது கணவருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் நாளை டிசம்பர் 5 அவருக்கு முதல் திருமண நாள் நடக்க இருக்கிறது. அதற்காக அவர் தனது கணவருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.

பலரும் ஹன்சிகாவிற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
View this post on Instagram