பிக்பாஸில் இருந்து வெளியேறிய கையோடு யுகேந்திரனுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.! இந்த நடிகர் படமா?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் பட வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் 90களில் உச்சகட்ட பாடகராக கொடிகட்டி பறந்தவர் மலேசியா வாசுதேவன். தனது வித்தியாசமான குரலால் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தார்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய கையோடு யுகேந்திரனுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.! இந்த நடிகர் படமா? 1

விளம்பரம்

அவரது மகன் யுகேந்திரன் மற்றும் மகள் பிரசாந்தினி ஆகிய இருவருமே தமிழ் திரையுலகில் பாடகர்களாக வலம் வந்து கொண்டிருந்தனர். இதில் யுகேந்திரனும் பல நல்ல பாடல்களை பாடி இருக்கிறார். மேலும் வில்லனாக சில படங்களில் நடித்திருக்கிறார். அஜித், விஜய் போன்ற பலருடன் நடித்திருக்கும் அவர் மலேசியா வாசுதேவன் இறப்புக்கு பின்னர் திரைத்துறையை விட்டு விலகி இருந்தார்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய கையோடு யுகேந்திரனுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.! இந்த நடிகர் படமா? 3
ஒரு கட்டத்தில் இந்தியாவை விட்டே விலகிய அவர் நியூசிலாந்தில் தனது குடும்பத்துடன் செட்டிலாகி இருந்தார். அதன் பின்னர் அவர் தமிழ் திரையுலகம் பக்கம் வரவே இல்லை. இந்த நிலையில் திடீரென பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதற்காக மீண்டும் இந்தியாவிற்கு திரும்பிய அவர், இந்த சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  நான் MALAVIKA கிட்ட கொடூரமா நடந்துக்கிட்டேன்..! அவங்க அழுதுட்டாங்க..! இயக்குனர் PA RANJITH அதிர்ச்சி தகவல்..!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய கையோடு யுகேந்திரனுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.! இந்த நடிகர் படமா? 5

முதல் சில வாரங்களில் எலிமினேட் ஆவார் என்று நினைத்த நிலையில் கேப்டனாக மாறி அதிரடி காட்டி இருந்தார் யுபேந்திரன். பின்னர் ஒரு மாதம் நன்றாக விளையாடி வந்த அவர் நான்காவது வாரம் நடந்த இரட்டை எலிமினேஷனில் சிக்கி வீட்டில் இருந்து வெளியேறினார். வீட்டிலிருந்து வெளியேறிய பின்னரும் பிரதீப்புக்கு வழங்கப்பட்ட ரெட் கார்டு போன்ற பல விஷயங்களில் பிக் பாஸ் குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

விளம்பரம்

பிக்பாஸில் இருந்து வெளியேறிய கையோடு யுகேந்திரனுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.! இந்த நடிகர் படமா? 7
அவர் பிக் பாஸில் இருந்த போது மீண்டும் தான் தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்டு வரவேண்டும் என்று பேசி இருந்தார். மேலும் அவர் பிக் பாஸில் இருந்த போது அவரது நண்பரான இயக்குனர் வெங்கட் பிரபுவும் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் வெங்கட் பிரபு விஜயை வைத்து இயக்கும் அடுத்த படத்தில் யுகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தளபதியின் 68வது படமான இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் கல்பாத்தி அகோரம் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

தொடர்புடையவை  உங்கள் மீது துர்நாற்றம் வீசும் என்று சொல்லி அனுமதிக்க மறுத்தார்கள்.! வேதனையுடன் பேசிய பெண்.!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய கையோடு யுகேந்திரனுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.! இந்த நடிகர் படமா? 9
கடைசியாக யுகேந்திரன் விஜயுடன் இணைந்து ‘திருப்பாச்சி’ படத்தில் நடித்திருந்தார். 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விஜயுடன் இணைந்து யுகேந்திரன் நடிக்க இருக்கிறார். திரைத்துறையில் மீண்டும் ஏதாவது சாதிக்க வேண்டும் என துடிக்கும் தனது நண்பனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி இருக்கிறார் வெங்கட் பிரபு.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment