கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய நிக்சன்.! அர்ச்சனா எடுக்கும் அதிரடி முடிவு.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய நிக்சன் மீது உரிமைக் குரல் தூக்கப் போவதாக அர்ச்சனா தெரிவித்திருக்கிறார். இதனால் இந்த வாரம் திரிஷாவுக்கு நீதி கிடைக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வினுஷா பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அவருடைய உடல் பாகங்கள் குறித்து மோசமாக கமெண்ட் செய்திருந்தார் நிக்சன். அது குறித்து தற்போது சண்டை வந்துள்ளது. இன்று காலை விஷ்ணுவிடம் பேசிக் கொண்டிருந்த நிக்சனிடம் விஷ்ணு, “வெளியில் அனைவருக்கும் வாழ்க்கை இருக்கிறது. நீ வினுஷாவைப் பற்றி செய்த கமெண்ட் கூட அவரை மிக பாதித்திருக்கும்” என்று கூறினார். அப்போது குறிக்கிட்ட அர்ச்சனா, வினுஷா குறித்து பேசிய போது நிக்சன் கோபமானார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய நிக்சன்.! அர்ச்சனா எடுக்கும் அதிரடி முடிவு.! 1
இவர்கள் இருவருக்குமான சண்டை ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக முற்றிய நிலையில், அர்ச்சனாவை மிகவும் கீழ்த்தரமாக வசைப்பாடத் தொடங்கினார் நிக்சன். “வாடி, போடி, நீ வாயை மூடுடி, வீட்டை விட்டு வெளியே போடி” என்றெல்லாம் மிகவும் மரியாதைக் குறைவாக அர்ச்சனாவை நடத்திக் கொண்டிருந்தார். மேலும், “இனிமேல் யாராவது வினுஷா என்று வாயைத் திறந்தீர்கள் என்றால் சொருகிடுவேன்” என்று மிரட்டல் விடுங்கள் தொணியில் பேசினார். இந்த நிலையில் நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கூறிவந்த நிலையில், இது குறித்து உரிமைக் குரல் எழுப்பப் போவதாக அர்ச்சனா தெரிவித்து இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  என்ன இவ்வளோ கேள்வி கேக்குற? அவங்கள கேக்க முடியுமா? மைனாவை அலறவிட்ட அமுதவாணன்.!

கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய நிக்சன்.! அர்ச்சனா எடுக்கும் அதிரடி முடிவு.! 3
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், அர்ச்சனா, தினேஷ் மற்றும் விஷ்ணு ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தினேஷ் அர்ச்சனாவைப் பார்த்து உரிமை குரல் எழுப்புமாறு கூற, “நான் கண்டிப்பாக உரிமைக்குரல் எழுப்புவேன், மேலும் பெண்ணியம் குறித்து பேசிக்கொண்டிருக்கும் மாயா, பூர்ணிமா இது குறித்து ஏன் வாய் திறக்கவில்லை என்று கண்டிப்பாக கேள்வி எழுப்ப வேண்டும்” எனக் கூறியிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்…! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment