ஒருத்தன் வீக்னஸை வச்சி அவனை குத்திட்டே இருக்காதீங்க.! கோபத்தின் உச்சிக்கே சென்ற விக்ரம்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அர்ச்சனாவிற்கு எதிராக சரவண விக்ரம், பூர்ணிமா, விஜய் வர்மா ஆகியோர் ஒன்று திரண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 68 நாட்களை கடந்து விட்டது. பிக் பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 35 நாட்களே மீதி இருக்கும் நிலையில், விறுவிறுப்பான டாஸ்க்குகளை பிக் பாஸ் குழுவினர் வைத்து வருகின்றனர். அந்த வகையில் இன்று ஐந்து கோல்ட் ஸ்டாருக்கான போட்டி வைக்கப்பட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருத்தன் வீக்னஸை வச்சி அவனை குத்திட்டே இருக்காதீங்க.! கோபத்தின் உச்சிக்கே சென்ற விக்ரம்.! 1

விளம்பரம்

இத்தனை நாள் டாஸ்க்குகளில் வென்றவர்களுக்கு ஒரே ஒரு கோல்ட் ஸ்டார் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ? அவர்களுக்கு ஐந்து கோல்ட் ஸ்டார்கள் ஒரே சமயத்தில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக மற்ற போட்டியாளர்களிடம் அவர்களுடைய நிறை, குறைகளை சொல்லி வாதிட்டு இந்த கோல்ட் ஸ்டாரை வெல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக ஆக்டிவிட்டி ஏரியாவில் அனைவரும் ஒன்றாக திரண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது விஜய் வர்மா, சரவண விக்ரமின் வீக்னஸை குத்தி குத்தி காண்பிக்காதீர்கள் என்று கூறுகிறார்.

தொடர்புடையவை  வேறு ஒரு பெண்ணை தூக்கிக்கொண்டு வந்த பார்த்திபன்.! விழுந்து விழுந்து சிரித்த காவ்யா.!

ஒருத்தன் வீக்னஸை வச்சி அவனை குத்திட்டே இருக்காதீங்க.! கோபத்தின் உச்சிக்கே சென்ற விக்ரம்.! 3
அதற்கு அர்ச்சனா, “நான் உன்னை பாவமாக காட்டத்தான் முயற்சி செய்தேன் உன்னுடைய வீக்னஸை குத்தி காட்டவில்லை” என்று கூற, கோபத்தின் உச்சகே செல்கிறார் சரவணன் விக்ரம். நீ என்னை இப்படித்தான் குத்தி காண்பித்தாய் என்று சொல்லி கத்துகிறார். அவருடன் இணைந்து பூர்ணிமா மற்றும் விஜய் வர்மா இருவரும் இணைந்து அர்ச்சனாவை தாக்கத் தொடங்குகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழ கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment