“பாக்யாவை திருமணம் பண்ணிக்கோங்க சார்”.! பழனிசாமியிடம் கோரிக்கை வைத்த ராதிகா.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ராதிகா பழனிச்சாமியிடம் சென்று பாக்யாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்க அதிர்ச்சியில் உறைந்து போகிறார் பழனிச்சாமி. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியின் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடராக இருந்து வருகிறது ‘பாக்கியலட்சுமி’ தொடர். இதில் பாக்யாவின் கணவர் கோபி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் இந்த திருமணத்தின் மூலமாக கோபிக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. பாக்யா கஷ்டப்பட்டு கோபி கட்டிய வீட்டை தனதாக்கி கொள்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"பாக்யாவை திருமணம் பண்ணிக்கோங்க சார்".! பழனிசாமியிடம் கோரிக்கை வைத்த ராதிகா.! 1
இருந்த போதும் கோபியும், ராதிகாவும் அவ்வப்போது பாக்யாவின் வீட்டிலேயே வந்து தங்குகின்றனர். தற்போது கதைப்படி ராதிகாவும், பாக்யாவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். பாக்யா படும் கஷ்டங்களை கோபியும் அவரது தாயாரும் இழிவாக பேசுவதை ராதிகாவால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. பாக்யாவிற்கு ஆதரவாக மாறத் தொடங்குகிறார் ராதிகா. குறிப்பாக பாக்யாவின் நண்பர் பழனிச்சாமியை திருமணம் செய்து கொள்ளுமாறு பாக்யாவிடமும் கூறுகிறார். இந்த நிலையில் தற்போது பாக்யாவிற்கு பொருட்காட்சியில் உணவு சமைக்கும் ஆர்டர் கிடைத்துள்ளது. அவரும் அதை சிறப்பாக கையாண்டு வருகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஏய் கோபி, என்கிட்டயே கேள்வி கேக்குறியா? திடீரென நீயா நானா கோபிநாத்தை திட்டிய பெண்ணால் பரபரப்பு.!

"பாக்யாவை திருமணம் பண்ணிக்கோங்க சார்".! பழனிசாமியிடம் கோரிக்கை வைத்த ராதிகா.! 3
பொருட்காட்சிக்கு வருகை தரும் ராதிகா மற்றும் பழனிச்சாமி இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பழனிச்சாமியிடம் ராதிகா. “நீங்கள் பாக்யாவை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறார். ராதிகாவின் இந்த பேச்சைக் கேட்ட பழனிச்சாமி அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமாவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment