சுந்தர் சியுடன் தான் உறவில் இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலை தற்போது நடிகை ஒருவர் மறுத்திருக்கிறார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கும் அவர், “ஜீவா, சுந்தர் சி, விஜய் ஆண்டனி போன்றவருடன் தான் உறவில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் வதந்தியே, இதெல்லாம் பப்ளிசிட்டி ஸ்டண்டுக்காக செய்யப்படுவது, தான் யாருடனும் உறவில் இல்லை, பிரதமர் மோடி போல நான் சிங்கிளாக இருக்கிறேன்” என்று சொல்லி விளக்கம் அளித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற ஒரு நடிகை தான் அனுயா. இவர் தற்போது படங்களிலிருந்து நடிப்பதிலிருந்து விலகி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துபாயில் பிறந்து பூனேவில் தனது நடிப்பு படிப்பை முடித்த அனுயா, 2007ம் ஆண்டு ஹிந்தி திரைப்படம் ஒன்றின் மூலமாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் 2009ம் ஆண்டு வெளியான ‘சிவா மனசுல சக்தி’ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு சில படங்களில் மட்டுமே நடித்து வந்த அவருக்கு சரியான பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டார். முதல் வாரத்திலேயே சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளர் என்ற பெயரை வாங்கி அதிலிருந்து வெளியேறினார். பின்னர் இவருக்கு ‘நண்பன்’ திரைப்படத்தில் நாயகி இலியானாவிற்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் இவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காத காரணத்தினால் திரைத்துறையில் இருந்து விலகி புனேவில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு விஜய் ஆண்டனி, சுந்தர் சி, ஜீவா போன்ற நடிகர்களுடன் உறவில் இருப்பதாக தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டது. இதற்கு வீடியோ ஒன்றை வெளியிட்டு அனுயா விளக்கம் அளித்திருக்கிறார். அதில், “தற்போது வெளியாகி வரும் செய்திகள் அனைத்தும் பப்ளிசிட்டி ஸ்டண்டுக்காக செய்யப்படுவது, நான் யாருடனும் எந்த உறவிலும் இல்லை, நான் பிரதமர் மோடி போல சிங்கிளாக வசித்து வருகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்/ மேலும் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அவர், “என்னைச் சுற்றி உள்ள ஆண்கள் சரியில்லாத காரணத்தினால் திருமணம் செய்து கொள்ளவில்லை” என்று பதில் அளித்துள்ளார். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O