காமெடி நடிகர் சதீஷ் நடித்துள்ள ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்துள்ளார். வழக்கம் போல இந்த படத்தையும் தனது பாணியில் கிழி கிழி என கிழித்து தொங்கவிட்டுள்ளார். காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சதீஷ் தற்போது முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் என்பவர் இயக்கத்தில் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ என்கிற படத்தில் நடித்த முடித்துள்ளார். செல்வின் ராஜ் சேவியர், இயக்குனர் சிம்பு தேவனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார். இந்த படம் நகைச்சுவை நிறைந்த திகில் திரைப்படமாக உருவாகி இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் சதீஷ் உடன் இணைந்து நடிகர் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், ரெஜினா, விடிவி கணேஷ், ரெடின் க்ங்ஸ்லி போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சென்னையில் மிகப் பெரிய அளவில் பொருட்செலவில் பழங்காலம் போன்ற அரங்குகள் அமைத்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று முடிந்துள்ளது. ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தின் டீசர், ட்ரெய்லர் என வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் படம் நேற்று வெளியானது.

இந்த படம் குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்துள்ளார். நீங்களும் அந்த விமர்சன வீடியோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Tamil Talkies