இயக்குனர் அமீர், சத்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாயவலை’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ‘பருத்தி வீரன்’, ‘ராம்’ போன்ற தரமான திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்தவர் இயக்குனர் அமீர். இவர் தற்போது இயக்கத்திலிருத்து விலகி முழு நேர நடிகராக மாறி இருக்கிறார். ‘வடசென்னை’ படத்தில் இவரது ராஜன் கதாபாத்திரம் பெரிய அளவில் வெற்றி பெறவே தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார் அமீர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது திரில்லர் கதையான மாயவலை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணா இயக்கி இருக்கிறார். மேலும் இந்தப் படத்தில் அமீருடன் இணைந்து நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா, சஞ்திதா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை அமீரின் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட்’ நிறுவனம் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இயக்குனர்கள் சேரன், சமுத்திரகனி, கரு.பழனியப்பன், சசிகுமார் ஆகியோர் இணைந்து டீசரை வெளியிட்டுள்ளனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த டீசரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: U1 Records