17 ஆண்டுகளுக்கு பிறந்த மகள்..! மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய நடிகர் பக்ரு.!

பிரபல மலையாள நடிகராக இருக்கும் பக்ரு 17 ஆண்டுகளுக்கு பின்பு தனக்கு மகள் பிறந்திருக்கும் செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார். மேலும் அந்த குழந்தைக்கு த்விஜா கீர்த்தி என்ற பெயரிட்டு, பெயர் சூட்டு விழாவை நடத்தி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

17 ஆண்டுகளுக்கு பிறந்த மகள்..! மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய நடிகர் பக்ரு.! 1

விளம்பரம்

2006ம் ஆண்டு ஜீவா நடித்த ‘டிஷ்யூம்’ என்கிற படத்தில் ‘அமிதாப்’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகர் பக்ரு. உயரம் குறைவாக இருக்கும் இவரின் இயற்பெயர் அஜய்குமார். உயரம் குறைவான நடிகர் என்கிற பிரிவில் கின்னஸ் சாதனை பெற்றிருக்கிறார்.

17 ஆண்டுகளுக்கு பிறந்த மகள்..! மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய நடிகர் பக்ரு.! 3

விளம்பரம்

இவரது உயரம் இரண்டு அடி ஆறு இன்ச் ஆகும். 76 உயரம் சென்டிமீட்டர் கொண்ட இவர் 1984ம் ஆண்டில் முதன்முறையாக படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் மிமிக்ரி கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், பின்னர் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

தொடர்புடையவை  பிச்சைக்காரனாக மிரட்டும் தனுஷ்..! குபேரன் படத்தின் டீசர் வெளியாகியது..!

17 ஆண்டுகளுக்கு பிறந்த மகள்..! மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய நடிகர் பக்ரு.! 5

விளம்பரம்

மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘அத்புத்த தீவ்பு’ என்கிற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின்னர் இந்த படம் ‘அற்புதத் தீவு’ என்று தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. பின்னர் 2013ம் ஆண்டு ‘குட்டீம் கொல்லும்’ என்கிற படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையாளராக வலம் வருகிறார் பக்ரு.

17 ஆண்டுகளுக்கு பிறந்த மகள்..! மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய நடிகர் பக்ரு.! 7

விளம்பரம்

தமிழில் டிஸ்யூம், ‘காவலன்’, ‘அற்புதத் தீவு’, ‘ஏழாம் அறிவு’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2006ம் ஆண்டு இவருக்கும் காயத்ரி மோகன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு முதல் குழந்தை பிறந்தது. ஆனால் சில காரணங்களால் முதல் குழந்தை இறந்திருந்தது. 2009ம் ஆண்டு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு தீப்தி கீர்த்தி என்று பெயர் வைத்திருக்கிறார்.

17 ஆண்டுகளுக்கு பிறந்த மகள்..! மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய நடிகர் பக்ரு.! 9

விளம்பரம்

தந்தையை குழந்தை போல் கவனித்துக் கொண்டிருக்கிறார் தீப்தி கீர்த்தி. பக்ரு வேலைக்கு செல்லும் பொழுது அவரை பைக்கில் சென்று டிராப் செய்து வருகிறார். இந்த நிலையில் திருமணம் முடிந்து 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த குழந்தைக்கு ‘த்விஜா கீர்த்தி’ என்று பெயர் வைத்திருக்கிறார் பக்ரு.

தொடர்புடையவை  வெளுத்து வாங்க வந்த விஜய் சேதுபதி..! உச்சகட்ட பயத்தில் போட்டியாளர்கள்..! Bigg Boss Promo…!

17 ஆண்டுகளுக்கு பிறந்த மகள்..! மகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய நடிகர் பக்ரு.! 11

விளம்பரம்

பெயர் சூட்டு விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தனது மகளை தூக்கி வைத்து கொஞ்சும் புகைப்படங்களும் வீடியோக்களும் பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment