சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தலைவர் 170’ படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி நாளை இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என்று தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தமிழ் திரையுலகம் மட்டும் அல்லாமல் தென்னிந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் சுமார் ரூ.600 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து மாபெரும் சாதனை படைத்திருந்தது. ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி இருக்கிறார் ரஜினி.

தொடர்ந்து ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல நடித்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாமல் ‘தலைவர் 170’ என்கிற பெயரிலேயே படம் அழைக்கப்பட்டு வருகிறது. இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஷூட்டிங் பணிகள் தொடங்கி சில காலம் ஆன பின்பும் டைட்டிலை வெளியிடாமல் படக்குழுவினர் அமைதி காத்து வந்தனர். இந்த நிலையில் நாளை ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு டைட்டில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி மாலை 5 மணிக்கு டைட்டில் வெளியீடு மற்றும் பிறந்தநாள் டீசர் வெளியாகும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் ஏகத்திற்கும் குஷியில் இருக்கின்றனர்..!
Let the celebrations begin for Thalaivar's B'day 🥳 Witness the grand reveal of #Thalaivar170 😎 title along with the B'day teaser video tomorrow at 5PM! 🕔@rajinikanth @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran #HBDSuperstarRajinikanth pic.twitter.com/wuQtDZIMsS
— Lyca Productions (@LycaProductions) December 11, 2023
Twitter Original Source From: Lyca Productions