ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்ட புயலாக மிக்ஜாம் புயல் இருந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்கள் வெள்ளைக்காடாக மாறி காட்சியளிக்கிறது. மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல மழை நின்ற பிறகும் வெள்ளை சேதப் பணிகளால் சென்னை ஸ்தம்பித்து கிடக்கிறது. வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆந்திரா உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக சென்டிமீட்டர் மழையை கொட்டி தீர்த்து விட்டது இந்த புயல். பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் தேங்கி இருப்பதால் படகு மூலமாக மக்களை வெளியில் கொண்டு வரும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர்கள் கூட தாங்கள் வெள்ளத்தில் சிக்கி இருப்பதாகவும், மீட்பு பணிகளுக்கு ஆட்கள் வேண்டியும் பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தனர். தொடர்ந்து தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. சாலையில் விழுந்த மரங்கள், வடிகால் பணிகள், தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணிகள், மக்களுக்கு அடிப்படை தேவைகளான இருப்பிடம், உணவு ஆகியவற்றை கொண்டு சேர்க்கும் பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு பணம் கொடுத்த உதவி வருகின்றனர். குறிப்பாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஹரிஷ் கல்யாண், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் பணம் கொடுத்து உதவி வருகின்றனர்.

தொடர்ந்து இன்றைக்கு முதலமைச்சரை சந்தித்த சன் குழும தலைவர் கலாநிதி மாறன் முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி ரூபாயை வழங்கி இருந்தார். முதலமைச்சரின் வீட்டிற்கு தனது மனைவி காவிரி கலாநிதி உடன் சென்ற அவர், 5 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சரிடம் நேரடியாக வழங்கினார். இந்த புகைப்படத்தை தற்போது பகிர்ந்திருக்கும் கலாநிதி மாறன், “புயல் நிவாரண நிதிக்கு இதை பயன்படுத்திக் கொள்வதற்காக முதலமைச்சரை சந்தித்து நேரில் வழங்கினேன்” எனத் தெரிவித்துள்ளார். கலாநிதி மாறனின் இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் மனதார பாராட்டி வருகின்றனர்.
#BREAKING | முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சன் குழுமத்தின் தலைவர் கலாநிதிமாறன், செயல் இயக்குநர் காவேரி கலாநிதி சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ₹5 கோடிக்கான காசோலையை வழங்கினர்
Mr. Kalanithi Maran, Chairman of Sun TV Network,… pic.twitter.com/I6BM5agxEl
— Sun News (@sunnewstamil) December 11, 2023
Twitter Original Source From: Sun News