பிக் பாஸ் சீசன் 7ன் 73 வது நாளுக்கான இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது பிக் பாஸ், “இந்த வீட்டாருக்கு விதிமுறைகளை மதிக்கும் தன்மை இல்லை என்பது தனக்கு மிகவும் தெளிவாக தெரிகிறது, ஐ அம் வெரி டிஸ்அப்பாண்டெட்” என்று சொல்லி கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார். சின்னத்திரை உலகில் டாப் ஹிட் நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 7 இறுதி கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் டான்ஸ் மாரத்தான் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற இருக்கிறது. மேலும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் கரன்சியும் வழங்கப்படுகிறது. அதை ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் தவறான முறையில் உபயோகித்துக் கொண்டிருக்கின்றனர். வீடியோக்களை கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஹவுஸ் மேட்ஸின் இந்த செயலை பார்த்த பிக் பாஸ், “உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை ஷேரிங், ஸ்ட்ராட்டஜி என்று செய்து உங்கள் மதிப்பை நீங்களே குறைத்துக் கொண்டீர்கள்? போர்டில் நீங்கள் என்ன எழுதினாலும் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பேன் என்று நினைத்து விட்டீர்களா?” என்று கேட்கிறார் அப்போது மணி அனைவரும் பணத்தை திருப்பி கொடுத்து விட்டதாக கூறுகிறார். அதன் பின்னர் மாயா பூர்ணிமாவிடம் ஏதோ சொல்ல நீங்கள் இந்த கேமை விளையாட வேண்டும். அவ்வளவுதானே விளையாடிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு கோபத்தில் பொருட்களை தட்டி விட்டு செல்கிறார்.

இதைப் பார்த்த பிக் பாஸ், “உங்களுக்கு விதிகளை மதிக்கும் தன்மை சுத்தமாக இல்லை என்பது எனக்கு தற்போது புரிகிறது. நான் மிகவும் ஏமாற்றமாக உணர்கிறேன்” என்று கோபமாக ஹவுஸ் மேட்ஸிடம் கூறிக் கொண்டிருக்கிறார் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: DINSEY + HOTSTAR TAMIL