விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தமிழ் லோடு ஏற்றி வந்த வண்டியை அர்ஜூன் ஆட்களை வைத்து திருடி விடுகிறார். ஆனால் அந்த வண்டியை மேகனா காப்பாற்றி கொண்டு வந்திருக்கிறார். இதை பார்த்த தமிழ், நமச்சி ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் தற்போது தமிழுக்கும், தொழிலதிபர் மேகனாவிற்கும் காதல் மலர்வது போன்று கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த கதைக் களத்தை ரசிகர்கள் பலரும் விரும்பவில்லை. தயவு செய்து கதையை மாற்றுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இயக்குனர் கதைக்களத்தை மாற்றுவது போல தெரியவில்லை. இன்னமும் மேகனாவுக்கு தமிழ் மீது காதல் வருவது போல தான் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. அப்படியான ஒரு ப்ரோமோ தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் தமிழ் கொடுக்க வேண்டிய ஆர்டரை ஒரு வேனில் ஏற்றுக் கொண்டு வருகிறார். ஆனால் அந்த வேனை அர்ஜுனும், அவரது மாமாவும் இணைந்து கடத்திக் கொண்டு சென்று விடுகின்றனர். பின்னர் ஆர்டர் கொடுக்க வேண்டிய ஓனரிடம் தமிழ் கெஞ்சி கொண்டிருக்கிறார். லோடு ஏற்றி வந்த வேன் காணமால் போனதைக் கேட்ட ஓனர், “இப்படி பொறுப்பில்லாமல் பதில் அளிக்கிறீர்களே? இனிமேல் உங்களுக்கு எந்த ஆர்டரையும் கொடுக்க மாட்டேன்” என்று கத்திக் கொண்டிருக்கிறார்.

அந்த சமயம் காணாமல் போன தமிழின் பொருட்களை ஏற்றி வந்த வேன் வந்து நிற்கிறது. வேனிலிருந்து மேகனா சட்டை பேண்ட் உடன் கெத்தாக வந்து இறங்குகிறார். அவர்தான் அந்த வேனை மீட்டுக் கொண்டு வந்திருப்பதாக தெரிகிறது. இதனால் தமிழுக்கு மேகனா மீது காதல் வரக் கூடுமோ? என்கிற அச்சம் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television