இவங்கள பாத்தாலே எரிச்சலா இருக்கு.! ராபர்ட் – ரட்சிதாவை வெளுத்து வாங்கிய வனிதா.!

ரட்சிதாவையும் ராபர்ட் மாஸ்டரையும் தாக்கி வனிதா பேசியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. தமிழ் திரை உலகில் முன்னணி நடன இயக்குனராக இருந்தவர் ராபர்ட் மாஸ்டர். பல முன்னணி கதாநாயகர்களுக்கு இவர் நடனம் சொல்லிக் கொடுத்திருக்கிறார். 41 வயதாகும் ராபர்ட் மாஸ்டருக்கு தற்போது வாய்ப்புகள் குறைந்த காரணத்தினால் அவர் பிக்பாஸ் சீசன் 6ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். அங்கு அவர் ரட்சிதா மேல் ஒருதலையாக காதல் கொண்டிருப்பதாக கூறி வருகிறார். பொதுவாக தான் நாடகங்கள் பார்ப்பதில்லை, ஆனால் ரட்சிதாவின் ஒரு நாடகத்தை நான் டிவியில் பார்த்தேன் அப்போதே அவர் மீது தனக்கு காதல் வந்து விட்டதாக பிக்பாஸ் ஆரம்பித்த சில தினங்களில் பேசியிருந்தார் ராபர்ட் மாஸ்டர்.

இவங்கள பாத்தாலே எரிச்சலா இருக்கு.! ராபர்ட் - ரட்சிதாவை வெளுத்து வாங்கிய வனிதா.! 1

விளம்பரம்

பின்னர் ரக்ஷிதாவை மூக்குத்தி என்று அழைப்பதும் அவர் பின்னாலேயே சுற்றுவதும், அவரை வைத்த கண் வாங்காமல் சைட் அடிப்பதும் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இந்த வீடியோக்கள் ரசிக்கும்படியாக இருப்பதாக நெட்டிசன்கள் இவர்கள் இருவரின் வீடியோக்களை இணையங்களில் பரப்பி வந்தனர். ரட்சிதாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி தற்போது அவரது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ரட்சிதாவிற்கு சரியான சீரியல்கள் எதுவும் கிடைக்காததால் அவரும் பிக்பாஸில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகிய அவர் கலர்ஸ் தமிழில் ஒரு சீரியல் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அது பாதியிலேயே கைவிடப்பட்டது. அதனால் பிக்பாஸை ஒரு வாய்ப்பாக கருதிக் கொண்டு உள்ளே வந்திருக்கிறார் ரட்சிதா.

விளம்பரம்

என்னதான் ராபர்ட் மாஸ்டர் ரட்சிதா மீது காதல் வலையை வீசினாலும் அதில் சிக்காமலே இருந்து வருகிறார் ரட்சிதா. ஆனாலும் சில இடங்களில் அவர்கள் செய்யும் வீடியோக்களை பார்த்து வெளியே பலரும் அவர்களை கலாய்த்து வருகின்றனர். குறிப்பாக ராபர்ட் மாஸ்டரின் முன்னாள் காதலியான வனிதா இவர்கள் இருவரின் வீடியோக்களைப் பற்றி தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். ராபர்ட் மாஸ்டருக்கு வயிற்று வலி காரணமாக அவர் அரிசி கஞ்சி வைத்து கொடுத்து வருகிறார். ஒருமுறை ரட்சிதாவிடம் சென்று எனக்கு சாப்பாடு போடு என்று கேட்க ரக்ஷிதா உங்களுக்கு கஞ்சி இருக்கிறது என்று பதில் சொல்லிவிட்டார். நான் ஆசையாக உன் சாப்பாட்டை சாப்பிட வந்தால் இப்படி பதில் சொல்கிறாயே என்று ராபர்ட் மாஸ்டர் கோபித்துக் கொண்டு சென்று விட்டார். அவரை ஷெரினா அழைத்து வந்து ரட்சிதாவிடம் சமாதானம் செய்து வைத்தார். அப்போது ரட்சிதா சில முகபாவனைகளை காட்டினார்.

விளம்பரம்

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. ரட்சிதாவும் ராபர்ட் மாஸ்டரும் இப்படி செய்வது பலருக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தினாலும், சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக வனிதாவுக்கு எரிச்சலை கிளப்பி இருக்கிறது. இது குறித்து பேசிய வனிதா என்னமா நடிக்கிறான் ராபர்ட், ஆரம்பத்தில் இருந்து அந்தப் பெண்ணை காதலிப்பதாக பிட்டை போட்டான். ஆனால் தற்போது வேறு பெண்ணை காதலிப்பதாக கூறுகிறான். இதையெல்லாம் பார்க்கும் பொழுது எரிச்சலாக இருக்கிறது , வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு இதை பார்த்தால் தவறாக தெரிகிறது என்று சொல்லிவிட்டு ரட்சிதா போலவே முகத்தை எக்ஸ்பிரஷன் செய்து காட்டி ரட்சிதாவையும் ராபர்ட் மாஸ்டரையும் பங்கமாக கலாய்த்து இருக்கிறார். இவர்கள் இருவர் செய்வதை பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது, ராபர்ட் வெளியில் தனக்கு காதலி இருப்பதாக கூறி ஒரு நாடகத்தை ஆடுகிறார் பிறகு எதற்கு ரட்சிதாவிடம் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று கேள்விகளையும் எழுப்பினார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment