டாப் கியரில் விக்ரமன் அசீம், முதலிடத்தில் விக்ரமன், அப்போ இந்த வாரம் வெளியேற போறது இவங்கதானா?

பிக்பாஸ் சீசன் சிக்ஸ் போட்டியில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் குறைந்த வாக்குகள் பெற்ற இருவர் பெயர் அடிபட்டு வருகிறது. பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நிகழ்ச்சியை வழங்கி வருவதில் முன்னிலை வகிக்கிறது விஜய் டிவி. அதில் பிக்பாஸ்க்கு முதலிடம் கிடைத்துள்ளது. பல கோடி மக்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்து வருகின்றனர். ஐந்து சீசன்கள் முடிந்த நிலையில் ஆறாவது சீசனை எதிர்பார்த்து வெகு நாளாக காத்திருந்தனர் பிக்பாஸ் ரசிகர்கள். அவர்களுக்கு விருந்து கொடுப்பது போல் அமைந்திருக்கிறது பிக் பாஸ் சீசன் 6. பல புது முகங்களை உள்ளே இறக்கி சண்டை, கலவரமாக ஆரம்பித்த நாள் முதலே சீசன் 6 இருந்து வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது எலிமினேஷனாக யார் வெளியேறப் போவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

டாப் கியரில் விக்ரமன் அசீம், முதலிடத்தில் விக்ரமன், அப்போ இந்த வாரம் வெளியேற போறது இவங்கதானா? 1

விளம்பரம்

இரண்டாவது வாரத்திலேயே ஜிபி முத்து மற்றும் சாந்தி இருவரும் வெளியேறிவிட, மூன்றாவது வாரத்தில் அசன் கோளாறை வெளியே அனுப்பி விட்டனர். 21 பேரைக் கொண்டு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி தற்போது 18 பேராக குறைந்து விட்டது. இந்த நிலையில் நான்காவது வாரம் ஷெரினா அல்லது ஆயிஷா இருவரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என்று தெரிகிறது. இருவரும் குறைந்த வாக்குகளையே பெற்றிருப்பதால் இவர்களில் ஒருவர் கண்டிப்பாக வெளியே அனுப்பப்படலாம் என்று தெரிகிறது. கடந்த வாரம் நடந்த பொம்மை டாஸ் நிகழ்ச்சியில் ஷெரினா தனக்கு மண்டையில் அடிபட்டிருப்பதாக ஒரு நாடகத்தை நிகழ்த்தினார். இது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. மேலும் அசீமின் பேச்சைக் கேட்டுக் கொண்டே தனலட்சுமி தான் தள்ளை தள்ளிவிட்டதாக ஷெரினா கூறினார்.

தொடர்புடையவை  எல்லாரையும் நீச்சல் குளத்தில் தூக்கி போட்டு விளையாடிய ஹவுஸ்மேட்ஸ்.! செம்ம ஜாலியான ப்ரோமோ

டாப் கியரில் விக்ரமன் அசீம், முதலிடத்தில் விக்ரமன், அப்போ இந்த வாரம் வெளியேற போறது இவங்கதானா? 3

விளம்பரம்

ஆனால் குறும்படத்தில் ஷெரினாவை தனலட்சுமி தள்ளவில்லை என்பதும், ஷெரினாவுக்கு மண்டையில் அடிபடவே இல்லை என்பதும் தெரிய வந்தது. இதனால் வெளியில் கேலிக்கு உள்ளனர் ஷெரினா. மேலும் ஆயிஷாவும் ஷெரினாவும் மலையாளத்திலேயே பேசிக் கொண்டிருப்பதால் தமிழ் நிகழ்ச்சிக்கு எதற்கு மலையாளிகளை எடுக்கிறீர்கள் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இந்த வாரம் ஷெரினாவே வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. நம்முடைய இணையதளத்தில் எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பிலும் ஷெரினாவே பின்தங்கி இருப்பதால் நாளை ஷெரினா பிக்பாஸ் நிகழ்ச்சியில் விட்டு வெளியேற்றப்படலாம் என்று தெரிகிறது. யார் வெளியேறப் போகிறார்கள் என்பது நாளைக்குள் தெரிந்து விடும்.

விளம்பரம்

2 thoughts on “டாப் கியரில் விக்ரமன் அசீம், முதலிடத்தில் விக்ரமன், அப்போ இந்த வாரம் வெளியேற போறது இவங்கதானா?”

    • விக்ரமன் பிக் பாக்ஸ் எனது ஓட்டு 9

      Reply

Leave a Comment