‘எதிர்நீச்சல்’ சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் கதிரை சந்தித்து போலீசார் வாக்குமூலம் வாங்குகின்றனர். இதில் அவர் முக்கியமான தகவல் ஒன்றை கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் நந்தினி, விசாலாட்சி மற்றும் ஞானத்திடம் “கதிரை காப்பாற்ற வேண்டியது என் கடமை. நான் காப்பாற்றி விட்டேன். இனி நீங்கள் அவரைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். ‘எதிர்நீச்சல்’ சீரியலில் குணசேகரனின் இரண்டாவது தம்பியாக இருக்கும் கதிர் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் என்று இருந்து வருகிறார். அவர் தனது மனைவி மற்றும் மகள்களை கூட மதிப்பதில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தனது அண்ணன் மனைவிகளாக இருக்கும் ஈஸ்வரி, ரேணுகா போன்றோரையும் கதிர் கீழ்த்தரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று வெளியான எபிசோடில் கதிரை ரவுடிகள் சிலர் சேர்ந்து நடுரோட்டில் வைத்து அடித்து துவைக்கின்றனர். இதை பார்க்கும் அவரது மனைவி நந்தினி கதிர் தனக்கு செய்த கொடுமைகளை கூட மறந்து, அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார். மருத்துவமனைக்கு வரும் விசாலாட்சி மற்றும் ஞானம் இருவரும், நந்தினி தான் அவரை அழைத்துச் சென்றார், நந்தினியால் தான் கதிருக்கு ஏதோ பிரச்சினை ஏற்பட்டது போல அவரை திட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் கதிர் கண்விழித்து விட்டதாக கூறி மருத்துவர் அனைவரையும் உள்ளே சென்று பார்க்கச் சொல்கிறார்.

உள்ளே சென்று பார்த்த போது, கதிர் உடல் முழுவதும் காயங்களுடன் படுத்துக் கிடக்கிறார். அவரைப் பார்த்த நந்தினி நான் அவரை காப்பாற்றி விட்டேன், அதுவரை தான் என் கடமை, இனி நீங்கள் அவரை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV