இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘லவ் டுடே’ படத்தின் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கும் புது படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. அந்த புகைப்படங்களை தற்போது விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த பூஜையில் எஸ்.ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

‘போடா போடி’ படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன் பின்னர் இவர் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது.

இருவரும் ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு சென்னையில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். விக்னேஷ் சிவன் கடைசியாக 2022ம் ஆண்டு ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தை இயக்கி இருந்தார். அடுத்ததாக அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது.

ஆனால் கதை பிடிக்காத காரணம் போன்றவற்றால் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். சமீபகாலமாக எந்த படத்திலும்கமிட் ஆகாமல் இருந்து வந்த விக்னேஷ் சிவன், விநாயகர் சதுர்த்தி அன்று வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார்.

‘லவ் டுடே’ படத்தின் மூலமாக பிரபலமான பிரதீப் ரங்கநாதனுக்கு டேட்ஸ் கொடுப்பது போல ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதாவது அடுத்த படத்தில் தனது இயக்கத்தில் நடிக்க பிரதீப் தனக்கு தேதி கொடுத்துள்ளதைத் தான் இப்படி சூசகமாக விக்னேஷ் சிவன் அறிவித்து இருந்தார்.
View this post on Instagram
இந்த நிலையில் இன்று பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் LIC( Love Insurance Corporation) படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த புகைப்படங்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன், “என்னுடைய இந்த கனவு திட்டத்தை நனவாக்கிய கடவுளுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார். அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.