சிலரின் வேஷம் கலைந்து விட்டது.! தினேஷ், விஷ்ணுவை மறைமுகமாக சாடிய கமல்.? ப்ரோமோ இதோ

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்து 75 நாட்களை முடித்து இன்று 76வது நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த வாரத்திற்கான முதல் ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. “கலையானது வன்மத்தை தணிக்கும் என்று இந்த வீட்டார் காண்பித்தனர். ஆனால் வார முதல் நாளில் பூசிய அரிதாரத்தை வார இறுதியில் கலைத்து விட்டனர், அவர்களின் வேஷம் கலைந்து விட்டது” என்று சொல்லி கமல் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியின் டாப் ஹிட் ரியாலிட்டி சொற்களில் ஒன்றாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 7. இறுதி கட்டங்களை நோக்கி நகர்ந்து வரும் இந்த சீசனில் தற்போது 12 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிலரின் வேஷம் கலைந்து விட்டது.! தினேஷ், விஷ்ணுவை மறைமுகமாக சாடிய கமல்.? ப்ரோமோ இதோ 1
23 போட்டியாளருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். மீதம் 12 போட்டியாளர்கள் மட்டுமே தொடர்ந்து வருகின்றனர். இன்னமும் நான்கு வாரங்களே மீதம் இருக்கும் நிலையில் போட்டியாளர்களின் எண்ணிக்கையை அதிரடியாக குறைக்க பிக் பாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதற்காக இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் என்கிற பெயரில் அனன்யாவை பிக் பாஸ் வெளியேற்றி இருந்தனர். தொடர்ந்து இந்த வார இறுதியில் ஒரு எலிமினேஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல்களாக இருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  நீ என்னடா பிக்பாஸ்ஸா? என்ன சொல்ல நீ யாருடா? நிரூப்பை அடிக்க பாய்ந்த பாலா | BB Ultimate

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கமலஹாசன், ஹவுஸ் மேட்ஸ் குறித்து சில தகவல்களை கூறுகிறார். அதில், “வாரத்தின் முதல் நாளில் பலர் அரிதாரம் பூசிக் கொள்கின்றனர். ஆனால் வார இறுதியில் யாரை நாமினேட் செய்யலாம் என்கிற பேச்சில் அவர்களின் வேஷம் கலைந்து விடுகிறது” என்று மறைமுகமாக தினேஷை சுட்டிக்காட்டுகிறார். தினேஷ் நேற்று இரவு விசித்ரா மற்றும் விஜயை நாமினேட் செய்யப்போவதாக பேசிக் கொண்டிருந்ததை தான் கமலஹாசன் இவ்வாறு குறிப்பிடுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment