நீ எது வேணா பேசுவ? நான் கேட்டுகிட்டு உக்காந்து இருக்கணுமா? பூர்ணிமாவை வெளுத்து வாங்கும் கமல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7ன் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பூர்ணிமாவை தற்போது கமலஹாசன் கேள்விகளால் துளைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார். பூர்ணிமாவும் கமலுக்கு திமிராக பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது “நீங்கள் எது வேணாலும் சொல்லி சமாளிப்பீர்கள், நாங்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமா?” என்று சொல்லி கமல் கோபத்தில் கொந்தளிக்கிறார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் பூர்ணிமா அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீ எது வேணா பேசுவ? நான் கேட்டுகிட்டு உக்காந்து இருக்கணுமா? பூர்ணிமாவை வெளுத்து வாங்கும் கமல் 1
பிக் பாஸ் சீசன் 7ன் 76வது நாளான இன்று வார இறுதி எபிசோடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கமலஹாசன் தற்போது பூர்ணிமாவை பார்த்து சில அதிரடியான கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறார். பூர்ணிமாவை விட்டுவிட்டு அவர் மற்ற போட்டியாளரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இதை கவனித்த பூர்ணிமா, தன்னை விட்டு விட்டு கேள்வி எழுப்புகிறீர்களே? என்று கேட்க அதற்கு பதிலளித்த கமல், “நான் இதை வேண்டுமென்றே தான் செய்தேன். நீங்கள் எது வேண்டுமானாலும் சொல்வீர்கள். அதை நான் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா? ஒரு பூவை கொண்டு வாங்கப்பா, யாருக்காவது பூ வைக்க வேண்டும், நீங்கள் சொல்லி முடியுங்கள்” என்று பூர்ணிமாவை கடுமையாக சாடுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  குணசேகரனுக்கு அருகில் அமர்ந்து அழுது கொண்டிருக்கும் தம்பிகள்.! என்ன ஆச்சு அவருக்கு.?

நீ எது வேணா பேசுவ? நான் கேட்டுகிட்டு உக்காந்து இருக்கணுமா? பூர்ணிமாவை வெளுத்து வாங்கும் கமல் 3
“எங்கள் காதில் பூ வைக்க முடியாது, நாங்கள் மூன்று கோடி பேர் இங்கே இருக்கிறோம், நான் கேட்கும்போது ஏதாவது ஒரு பொய்யை சொல்லி சமாளித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? என்று கேட்கிறார். அதற்கு பூர்ணிமா, “சமாளிக்க வேண்டும் என்று நினைத்தால் நான் எப்படி வேண்டுமானாலும் சமாளிக்கலாம்” என்று திமிராக பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது குறிக்கிடும் கமலஹாசன், “இப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்களே? அதுபோலவா? என்று பூர்ணிமாவை ஆஃப் செய்கிறார். அந்த அதிரடியான புரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment