இந்தியாவில் வேலைவாய்ப்பு திறன் கூடியுள்ளது: ஆய்வு

கோடிக்கணக்கான பட்டதாரிகளுக்கு, ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தின் கல்வி முறைகளுக்கும் ஒரு நல்ல செய்தி கிடைத்திறது. சில ஆண்டு காலமாக 70 சதவிகித பட்டதாரிகள் வேலையில்லாமல் பரிதவித்த நிலையில், தற்போது அவர்களில் பாதிக்கும் மேலான பட்டதாரிகள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஆனாலும் இந்த ஆய்வு, பல்வேறு துறைகளில் பட்டதாரிகளின் வேலை திறன் போதுமான அளவில் இல்லாததன் காரணமாக பொருளாதாரத்தின் வடிவம் மாறிப்போய் உள்ளதை பற்றி பேசவில்லை.

விளம்பரம்

வீபாக்ஸ், பீப்பிள் ஸ்ட்ராங் மற்றும் சிஐஐ ஆகிய அமைப்புகள் சமீபத்தில் நாடுமுழுவதும் 3 இலட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கடந்த ஆண்டில் 33 சதவிகிதமாக இருந்த வேலைப் பெற்றுக்கொள்ளும் திறன் இந்த ஆண்டு 46 சதவிகிதமாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவில் வேலைவாய்ப்பு திறன் கூடியுள்ளது: ஆய்வு 1

வேலைவாய்ப்பினை பெரும் எம்.பி.ஏ பட்டதாரிகள் கடந்த ஆண்டில் 40 சதவிகிதமாக இருந்தனர். அதே இந்தாண்டில் 54 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேபோல பார்மசி, பாலிடெக்னிக், பி.காம் மற்றும் பி.எ பட்டதாரிகளின் வேலைவாய்ப்பும் 15 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  சிபிஎஸ்இ தேர்வுகளில் 2020ம் ஆண்டு முதல் ஏ.ஐ. போட்களைப் பயன்படுத்த உ.பி. அரசு திட்டம்!

இருப்பினும் பி.டெக், எம்.சி.ஏ, கணினி சார்ந்த படிப்புகள் மற்றும் இதர பொறியியல் படிப்புகளுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதாக இந்த ஆய்வின் மூலம் அறியமுடிகிறது.

இந்தியாவில் வேலைவாய்ப்பு திறன் கூடியுள்ளது: ஆய்வு 3

அதே போல, அதிக வேலைவாய்ப்பினை கொண்டுள்ள மாநிலமாக முதலிடத்தில் மகாராஷ்டிராவும், இரண்டாமிடத்தில் தமிழகமும் அதனை தொடர்ந்து உ.பி, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இடம்பெறுள்ளனர். நகரங்கள் அடிப்டையில், மும்பை முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு, புது தில்லி, புனே, லக்னோ, சென்னை மற்றும் கோவை ஆகியவை முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.

விளம்பரம்

இதேவேளையில், பெண்கள் அதிகமாக வேலைவாய்ப்பினில் பங்கெடுக்கும் மாநிலங்களாக தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி இடம்பெற்றுள்ளன. நகரங்கள் அடிப்படையில் ஹைதராபாத், காஜியாபாத் மற்றும் விசாகப்பட்டினம் போன்றவை முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

விளம்பரம்

Leave a Comment