குமரனுக்கு கிடைத்த மிகப் பெரிய ஆர்டர்.! குமரனுக்காக இரவு பகலாக உழைக்கும் குடும்பம்.! ப்ரோமோ இதோ.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் மிகவும் கஷ்டப்பட்டு டைலர் கடை ஒன்றை ஆரம்பித்த குமரனுக்கு மிகப்பெரிய ஆர்டர் ஒன்று கிடைத்திருக்கிறது. இரண்டு நாட்களில் அந்த ஆர்டரை முடித்துக் கொடுத்தால் பெரிய அளவு பணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் குடும்பமாக அனைவரும் அமர்ந்து அந்த வேலையை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். “நான்கு சகோதரிகளின் கதை” என்கிற அடையாளத்துடன் ஆரம்பிக்கப்பட்டது தான் ‘மகாநதி’ சீரியல். ஒளிபரப்பாகத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே மக்களின் மனம் கவர ந்த சீரியலாக மாறிப்போனது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குமரனுக்கு கிடைத்த மிகப் பெரிய ஆர்டர்.! குமரனுக்காக இரவு பகலாக உழைக்கும் குடும்பம்.! ப்ரோமோ இதோ.! 1

விளம்பரம்

இந்த சீரியலின் கதைப்படி கங்கா, காவேரி, யமுனா, நர்மதா என்கிற நான்கு சகோதரிகளின் தந்தையை அவரது நண்பர் பசுபதி என்பவர் ஏமாற்றி அவரின் சொத்துக்களை அபகரித்து விட்டு நான்கு சகோதரிகளையும் நடுத்தெருவில் விடுகிறார். இதனால் ஊர் விட்டு ஊர் சென்று பிழைப்புக்காக நான்கு பேரும் செல்கின்றனர். இதில் மூத்த மகளாக இருக்கும் கங்காவுக்கும் அவரது அத்தை மகன் குமரனுக்கும் திருமணம் நடைபெறுகிறது. அதேபோல் காவிரி சூர்ய என்பவரை விதிவசத்தால் ஒரு வருடம் ஒப்பந்தத்தில் திருமணம் செய்து கொள்கிறார். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் குமரன் பிழைப்புக்காக டைலர் கடை ஒன்றை ஆரம்பிக்கிறார். ஆனால் அவருக்கு ஆர்டர் எதுவும் கிடைக்கவில்லை. குடும்பத்தை நடத்தவே மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்.

தொடர்புடையவை  பிபி ஜோடிகள் விட்டு விலகுகிறார்களா? அமீரும் பாவனியும்?? விஜய் டிவி சொல்லியும் கேட்காத அமீர்..! பாவனி கொடுத்த விளக்கம்

குமரனுக்கு கிடைத்த மிகப் பெரிய ஆர்டர்.! குமரனுக்காக இரவு பகலாக உழைக்கும் குடும்பம்.! ப்ரோமோ இதோ.! 3
இந்த நிலையில் சர்ச்சுக்கு செல்லும் குமரனுக்கு, ஃபாதர் மூலமாக மிகப்பெரிய ஆர்டர் ஒன்று கிடைக்கிறது. இரண்டு நாட்களில் ஆர்டரை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று இரவு பகலாக வேலை பார்க்கின்றனர். அப்போது அங்கு வரும் போலீசார் இரவில் கடை நடத்தக்கூடாது என்று உத்தரவிடுகின்றனர். எனவே தையல் மிஷினை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு செல்லும் குமரன், கங்கா மற்றும் ஒட்டுமொத்த குடும்பமே இரவு பகலாக வேலை பார்க்கிறது. அந்த அழகான ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment