“இனிமே நான்தான் டா உனக்கு எதிரி” தமிழிடம் சவால் விடும் ராகிணி.! ‘தமிழும் சரஸ்வதியும்’ ப்ரோமோ

‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தமிழுக்கு எதிராக அவரது தங்கை ராகிணி இனி களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஜுன் என்ற ஒரு வில்லனை வைத்தே சமாளிக்க முடியாது நிலையில், தற்போது ராகிணியும் தமிழுக்கு எதிராக வில்லத்தனங்களை செய்ய தொடங்க இருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் டாப் ஹிட் சீரியலாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல் தான் ‘தமிழும் சரஸ்வதியும்’ இதில் தற்போது அர்ஜுன் தான் பல தில்லாலங்கடி வேலைகளை செய்தார் என்பதை மேகனா ஆதாரத்துடன் நிரூபிக்கிறார். எனவே போலீசார் அர்ஜுனை கைது செய்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"இனிமே நான்தான் டா உனக்கு எதிரி" தமிழிடம் சவால் விடும் ராகிணி.! 'தமிழும் சரஸ்வதியும்' ப்ரோமோ 1

விளம்பரம்

மேலும் அர்ஜுன் நடத்தி வந்த கம்பெனியையும் அதிகாரிகள் சீல் வைத்து அவரை கைது செய்து அழைத்து செல்கின்றனர். இதைத்தொடர்ந்து தமிழை தவறாக பேசிய தொழிலாளர்கள் அனைவருக்கும் மேகனா சரியான பதிலடி கொடுக்கிறார். மேலும் தமிழ் மீது எந்த தவறும் இல்லை என்பதையும் அவர் நிரூபிக்கிறார். தொடர்ந்து வீட்டிற்கு வரும் தமிழ் அர்ஜூனுக்கு தண்டனை கிடைத்தது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நமச்சி, “அர்ஜுனனுக்கு எப்படியும் ஒரு வருடம் ஜெயில் தண்டனை கிடைக்கும்” என்று கூறிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து அர்ஜுனனின் மனைவியும், தமிழுன் தங்கையுமான ராகிணி வருகை தருகிறார்.

தொடர்புடையவை  இந்த முறையும் எஸ்கேப் ஆன நிக்சன்.! வசமாக மாட்டிய டைட்டில் வின்னர் விக்ரம்.! நாமினேஷன் முடிவுகள்

"இனிமே நான்தான் டா உனக்கு எதிரி" தமிழிடம் சவால் விடும் ராகிணி.! 'தமிழும் சரஸ்வதியும்' ப்ரோமோ 3
அவர் தமிழிடம், “நீங்க எல்லாம் சந்தோஷமா இருங்க, நீங்கள் மூடிய அந்த கம்பெனியை எப்படியாவது கஷ்டப்பட்டு திறந்து காட்டுவேன்” என்று சொல்லி தமிழுக்கு சவால் விட்டு செல்கிறார். இதனால் அர்ஜூனை தொடர்ந்து ராகிணியும் தமிழுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபடுவார் என்று தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment